இலங்­கையின் வரை­ப­டத்தில் வடக்கு,கிழக்கு இல்­லாத புதிய நாட்டை உரு­வாக்­கு­வதே ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­வைத்­துள்ள புதிய நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் கொள்கைத் திட்­ட­மாகும் என்று முன்னாள் ஜனா­தி­பதியும் ஐ.ம.சு.மு.வின் குருணா கல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.

சமஷ்­டிக்கு அப்பால் சென்ற தனி­நாடே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் கோரிக்­கை­யாகும். இத­னோடு ரணில் எவ்­வாறு இணங்­கினார் என்­பது கேள்விக் குறி­யா­க­வுள்­ளது என்றும் முன்னாள் ஜனா­தி­பதி குறிப்பிட்டார்.

கொழும்பு விஹார மகா­தேவி உள்­ளக அரங்கில் 64 சிங்­கள பௌத்த அமைப்­புக்கள் இணைந்து கையெ­ழுத்­திட்ட பொது உடன்­பாட்டு மாநாட்டில் நேற்றைய தினம் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மேற்கண்டவாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

நாட்­டையும் மக்­க­ளையும் நேசிக்கும் அமைப்­புக்கள் இன்று ஓர­ணியில் திரண்டு எம்­மோடு உடன்­ப­டிக்கை செய்­து­கொண்­டமை மகிழ்ச்­சி­ய­ளிக்­கின்­றது.

இதே­வேளை இன்று நாட்டை நேசிக்­காத மற் றும் மக்­களை நேசிக்­காத டொலர்­க­ளுக்கு அடி­மை­யா­ன­வர்கள் எம்மை தோல்­வி­ய­டையச் செய்ய கங்­கணம் கட்டி செயல்­ப­டு­கின்­றனர்.

எமது நாடு கடந்த 8 வரு­டங்­க­ளுக்கு முன்பு எவ்­வாறு இருந்­தது என்­பதை நீங்கள் அறி­வீர்கள். எமது முப்­ப­டை­யி­னரும் உயிரை அர்ப்­பணம் செய்து சுக துக்­கங்­களை மறந்து நாட்­டுக்­காக போராடி நாட்டை மீட்­டெ­டுத்­தனர். அதே­போன்று நாட்டின் விடு­த­லைக்­காக பொது மக்­களும் அர்ப்­ப­ணிப்புச் செய்­தனர்.

நாடு என்­னிடம் கைய­ளிக்­கப்­பட்­ட­போது நாட்டின் மூன்றில் இரண்டு பகுதி எமது கட்­டு­பாட்டின் கீழ் இருக்­க­வில்லை. கடல் எல்­லை­களும் எமக்கு சொந்­த­மாக இருக்­க­வில்லை. அவ்­வாறு இருந்த நாட்டை மீட்­டெ­டுத்து சுதந்­தி­ர­மான நாட்டை மக்­க­ளுக்கு கைய­ளித்தேன்.

யுத்­தத்தை முடித்து பயங்­க­ர­வா­தத்தை முற்­றாக அழித்­தது மட்­டு­மின்றி நாட்டின் அபி­வி­ருத்­தி­களை துரி­தப்­ப­டுத்­தினேன். பொரு­ளா­தா­ரத்தை அபி­வி­ருத்தி செய்தேன். 98 சத­வி­கிதம் பேருக்கு நாட்டில் மின்­சாரம் வழங்­கப்­பட்­டது.

120 சத­வி­கி­தத்­தி­ன­ருக்கு தொலை­பேசி வச­திகள் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்­டன.வடக்கு கிழக்கு மலை­யகம் மற்றும் தெற்கு கொழும்பு என நாட்டின் அனைத்து பகு­தி­க­ளுக்கும் அபி­வி­ருத்­திகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

நாட்டை அபி­வி­ருத்தி செய்யும் போது இன, மத, மொழி பிர­தேச பேதங்கள் பார்க்­கப்­ப­ட­வில்லை. அனை­வ­ருக்கும் அபி­வி­ருத்­தி­களின் பயன் கிடைக்­கப்­பெற்­றன. அனைத்து இன மக்­களும் அச்­ச­மின்றி சுதந்­தி­ர­மாக வாழும் நிலை ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

ஆனால் நாடு இன்று பின்­னோக்கி செல்கிறது. அபி­வி­ருத்­திகள் அனைத்தும் ஸ்தம்­பிதம் அடைந்­துள்­ளன. நாடு தொடர்பில் பயங்­க­ர­மான அச்ச நிலை­தோன்­றி­யுள்­ளது.

எமது நாடு எமது கையை விட்டுப் போய்­வி­டுமா? என்ற பயம் குடி­கொண்­டுள்­ளது. ரணிலின் புதிய நாட்டை கட்­டி­ட­யெ­ழுப்பும் கொள்­கையும் இதற்கு ஏற்­ற­தா­கவே அமைந்­துள்­ளது. இது தான் உண்மை.

இலங்­கையின் வரை­ப­டத்தில் வடக்கு கிழக்கு இல்­லாத புதிய நாட்டை உரு­வாக்­கு­வதே ரணிலின் புதிய நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் கொள்­கை­யாகும்.

வடக்கு கிழக்கு பிரிந்த பின்னர் இலங்­கைக்­கான புதிய வரை­படம் உரு­வாகும். இதற்­கான உறுதி மொழி­யையே ரணில் புதிய நாடு கட்­டி­யெ­ழுப்­பப்­படும் என்பதன் ஊடாக வெளியிட்டுள்ளார் வெளி­யிட்­டுள்ளார்.

வடக்கு கிழக்கு இணைக்­கப்­பட்ட சமஷ்டி முறைக்கு அப்பால் சென்ற தனி­நாட்­டையே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் கேட்­கின்­றனர்.

இதற்­காக எந்­த­வி­த­மான உடன்­ப­டிக்­கைகள் செய்து கொள்­ளப்­பட்­டதோ தெரி­யாது. அத்­தோடு இத் திட்­டத்­திற்கு ரணில் எவ்­வாறு இணங்­கினார் என்­பது கேள்­விக்­கு­றி­யா­கவே உள்ளது.

நாடு பிரிந்தால் அதனை மீண்டும் இணைப்பது பாரிய நெருக்கடிகளை தோற்றுவிக்கும். எனவே எமது கொள்கை தெளிவாகவுள்ளது.

ஒற்றையாட்சியின் கீழ் அனைத்து இனங்களும் ஒற்றுமையுடன் வாழக்கூடிய நாடு. மதச் சுதந்திரம், மதப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட நாடே எமது கொள்கையாகும் என்றும் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.

Share.
Leave A Reply