உலகமெங்கிலும் மனிதர்கள் குகைகளில் வசித்துக்கொண்டும், பச்சை மாமிசம் உண்டும், இலைகள் கோர்த்து ஆடையாய் உடுத்தி வந்த அதே காலத்தில் வானுயர் கட்டிடங்கள் கொண்ட நகரங்கள் உருவாக்கியும், நல்லதோர் வாழ்க்கைக்கு நெறிகாட்டும் இலக்கியங்கள் படைத்தும், மருத்துவம், வான சாஸ்த்திரம், வேதம், போர்க்கலை போன்றவற்றில் கரைகண்டிருந்த அறிஞர்கள் வாழ்த்த திருநாடு ‘இந்தியா’.

இத்தனை மகத்துவம் கொண்ட நாடாக இருந்து வந்தாலும் கால சுழற்சியில் படையெடுப்புகளாலும், நாடு பிடிக்கும் ஆசை கொண்ட நரிகளின் சூழ்ச்சியாலும் அடிமைப்பட்டு போனது இந்நாடு.

அப்படி இரண்டு நூற்றாண்டுகள் வெள்ளையரிடம் அடிமைப்பட்டருந்த நமக்கு 1858 ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு.

வெள்ளையருக்கு எதிரான வீர விதை தூவப்பட்ட ஆண்டு அது. அவ்வாண்டு வெள்ளையருக்கு எதிரான புரட்சியில் ஒரே இடத்தில் வைத்து 2,200 சுதந்திர போராட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த இடத்தை பற்றி மேலும் பல தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

16-1437041721-sikandarbaghgate

சிகந்தர் பாக் : உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் கோட்டை மதில் சுவர்களுக்குள்ளே அமைந்திருக்கும் அழகிய தோட்டமும் மாளிகையும் தான் இந்த சிகந்தர் பாக் என்ற இடமாகும்.

sinthupathe

பிரிட்டிஷ் காலத்தில் அவாத் என்ற சிறிய ராஜ்யத்தின் முக்கிய இடமாக இந்த சிகந்தர் பாக் இருந்துள்ளது. இந்த மாளிகை தோட்டத்தை அவாத் ராஜ்யத்தின் கடைசி நவாப் வாஜித் அலி ஷாஹ் என்பவர் கட்டியிருக்கிறார்.

16-1437041715-sikandarbagh1870

தாஜ் மகாலுக்கு எப்படி ஷாஹ் ஜஹான் தன்னுடைய விருப்பத்துக்குரிய மனைவியான மும்தாஜின் பெயரை சூட்டினாரோ அதே போல வாசித் அலி ஷாவும் தனக்கு மிகவும் பிடித்த மனைவியான சிகந்தர் பேகம் என்பவரின் பெயரையே சூட்டியிருக்கிறார்.

16-1437043621-the-relief-of-lucknow

பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இந்த அவாத் ராஜ்ஜியம் கைப்பற்றப்படுகிறது . அவர்கள் இதன் நவாப் வாஜித் அலி ஷாஹ்_வை கல்கத்தாவில் கொண்டு போய் சிறைவைக்கின்றனர். இது இந்த ராஜ்யத்துக்குள் மட்டுமில்லாது மற்ற பகுதிகளிலும் பெரும் கிளர்ச்சியை ஏற்ப்படுத்துகிறது.

16-1437043684-troops-of-the-native-allies

பிரிட்டிஷ் படைகளில் இந்திய வீரர்கள் பயன்படுத்தும் தோட்டாக்களின் குப்பியில் பன்றி மற்றும் மாட்டின் கொழுப்பை தடவியிருப்பது, திலகம் வைப்பது, தலைப்பாகை அணிவது, தாடி வளர்ப்பது போன்ற மத வழக்கம் சார்த்த விஷயங்களுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் விதித்திருந்த கட்டுப்பாடுகள் போன்றவை வீரர்களின் கோபத்தை கிளறவே அதுவே இந்த சிப்பாய்களின் புரட்சிக்கு வித்திட்டது.

16-1437041734-sikandra-bagh-exterior

1857ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி ‘ஈத்’ பண்டிகையின் போது லக்னோவில் இருந்த அவாத் மற்றும் பெங்கால் படைகள் பிரிட்டிஷ் ராஜ்யத்திற்கு எதிராக புரட்சியில் ஈடுபடுக்கின்றனர். அந்த புரட்சியின் தொடர்ச்சியாக லக்னோ நகரில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பிரிட்டிஷ் படைகளுக்கேடையே பல மாதங்களுக்கு சண்டை நடைபெறுகிறது.
16-1437041727-sikanderbagh2

அந்த புரட்சியின் போது சிப்பாய்களின் முக்கிய கோட்டையாக இந்த சிகந்தர் மாளிகை இருந்திருக்கிறது. இதனுள் மட்டுமே இரண்டாயிரத்துக்கும் மேற்ப்பட்ட கிளர்ச்சியாளர்கள் இருந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் கொன்று லக்னோவை கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து விடுவிக்க திட்டமிட்டது பிரிட்டிஷ் அரசு.
16-1437041702-image-secundra-bagh-after-indian-mutiny-higher-res

அதற்காக 93வது ஹை லாண்டேர்ஸ் மற்றும் 4வது பஞ்சாப் காலாட்படை ஆகிய படையணிகளை கொண்டு இந்த கோட்டையினுள் நுழைந்து அங்கிருந்த 2,200 சுதந்திர போராட்ட வீரர்கள் அனைவரையும் சுட்டுக்கொன்றது. அப்படி சுட்டுக்கொன்றதோடு மட்டுமில்லாமல் அவர்களின் சடலங்களை அப்புறப்படுத்தாமல் இருந்த இடத்திலேயே அழுகிப்போக விட்டது பிரிட்டிஷ் அரசாங்கம். இந்த புகைப்படத்தில் வீரர்களின் எலும்புக்கூடுகள் சிகந்தர் கோட்டையில் அப்படியே இருப்பதை காணலாம்.

16-1437041721-sikandarbaghgate

இன்று இந்த கோட்டையில் தேசிய தாவரவியல் ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது. இந்திய வரலாற்றை தெரிந்துகொள்வதில் ஆர்வமுடையவர்கள் இந்த கோட்டையை பார்வையிடுவதற்காக வருகின்றனர்.

16-1437044675-bada-imambara-13783656780

இந்த கோட்டையை போலவே வரலாற்று செழுமை நிறைந்த நிறைய இடங்கள் லக்னோவில் இருக்கின்றன. அதைவிட முக்கியமாக முகலாய உணவுகளுக்கும் லக்னோ மிகப்பிரபலமான இடமாகும்.

 

Share.
Leave A Reply