கொட்­டாஞ்­சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஜம்­பட்டா வீதியில் நேற்று பட்­டப்­ப­கலில் நபர் ஒருவர் முச்­சக்­கர வண்­டியில் வந்த நால்­வரால் கூரிய வாள் மற்றும் கத்தி கொண்டு வெட்­டிக்­கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.

இச்­சம்­பவம் நேற்று பிற்­பகல் 1.15 மணி­ய­ளவில் ஜம்­பட்டா வீதியில், கல்­பொத்த வீதிக்கு திரும்பும் இடத்­துக்கு அருகே உள்ள கடைக்கு முன்னால் இடம்­பெற்­றுள்­ளது.

சம்­ப­வத்தில் 33 வய­து­டைய ஜோன் பீட்டர் ரெக்ஸி றீகன் என்ற நபரே உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் பழிக்கு பழி­தீர்க்கும் முக­மாக இந்த கொலை இடம்­பெற்­றுள்­ள­தாக ஆரம்ப கட்ட பொலிஸ் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கேச­ரிக்கு தெரி­வித்தார்.

இது தொடர்பில் மேலும் அறிய முடி­வ­தா­வது, நேற்று பிற்­பகல் 1.15 மணி­ய­ளவில் முச்­சக்­கர வண்­டி­யொன்றில் நால்வர் வாள், கத்­தி­க­ளுடன் வந்­துள்­ளனர்.

அவர்கள் ஜம்­பட்டா வீதியில், கல்­பொத்த வீதிக்கு திரும்பும் இடத்­துக்கு அருகே உள்ள கடைக்கு முன்னால் இருந்த றீகனை சர­ம­ாரி­யாக வெட்டி சாய்த்­துள்­ளனர். இதன் போது ஸ்தலத்­தி­லேயே றீகன் உயி­ரி­ழந்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து சந்­தேக நபர்கள் நால்­வரும் தாம் வந்த முச்­சக்­கர வண்­டி­யி­லேயே தப்பிச் செல்ல முற்­பட்ட போதும் அது சாத்­தி­யப்­ப­ட­வில்லை. அந்த முச்­சக்­கர வண்­டியை ஸ்தலத்­தி­லேயே போட்­டு­விட்டு அவர்கள் நால்­வரும் அங்­கி­ருந்து தப்பிச் சென்­றுள்­ளனர்.

சம்­ப­வத்­தை­ய­டுத்து ஸ்தலத்­துக்கு விரைந்த கொட்­டாஞ்­சேனை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி தலை­மை­யி­லான பொலிஸார் விசேட விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

இதன் போது தப்பிச் சென்ற சந்­தேக நபர்­களை அடை­யாளம் கண்ட பொலிஸார் அவர்­க­ளது சகோ­தரன் ஒரு­வனை றீகன் கொலை செய்­ததான குற்றச்சாட்டு உள்ளதாகவும் அது தொடர்பில் கைதாகி கடந்த ஒரு­வா­ரத்­துக்கு முன்­ன­ரேயே அவர் பிணையில் வெளியே வந்­துள்­ள­மை­யையும் அவர்கள் கண்­ட­றிந்­தனர்.

இந் நிலையில் இது பழிக்கு பழி­வாங்கும் நோக்­கோடு புரி­யப்­பட்ட கொலை என சந்­தே­கிக்கும் பொலிஸார் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

கொலை செய்­யப்­பட்­டுள்ள றீகன் என கொட்­டாஞ்­சேனை பொலிஸ் பிரி­வி­லேயே வசித்து வரும் நப­ருக்கு எதி­ராக ஒரு மனிதப் படு­கொலை, இரு கொள்­ளைகள் மற்றும் கைக்­குண்டு வைத்­தி­ருந்­தமை உள்­ளிட்ட குற்றச் சாட்­டுக்கள் தொடர்பில் நீதி­மன்­றங்­களில் வழக்­குகள் உள்­ள­தாக பொலிஸ் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

இத­னி­டையே இந்த கொலை­யுடன் தொடர்­பு­டைய சந்­தேகநபர்கள் நால்­வரில் இரு­வரை நேற்று மாலை 6.00 மணி­ய­ளவில் கொட்­டாஞ்­சேனை பொலிஸார் கைது செய்­தனர். 26, 21 வய­து­டைய கொட்­டாஞ்­சேனை பிர­தே­சத்தை சேர்ந்­தோரே இவ்­வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

https://youtu.be/L5yM9gOq0KY

 

Share.
Leave A Reply