மும்பையில் 15 வயதான சிறுமி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் திலக் நகர் அருகே அமைந்துள்ள ஹர்ஷா எண்டர்பிரைசஸ் என்கிற லாட்டரி சென்டர் ஒன்றில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரியில் இருந்து மும்பையில் இது 3வது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே வாரத்தில் இது 2வது சம்பவம்.

ஒரு ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர் கொடுத்த துப்புக்களின் அடிப்படையில் அந்த 6 பேரையும் வளைத்து பிடித்துள்ளனர் மும்பை போலீசார்.

இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் 4, 8, 12 ஆகியவற்றின் அடிப்படையில் பலாத்காரம் மற்றும் மானபங்க வழக்கில் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வருகின்ற ஆகஸ்ட் 13 வரை இவர்கள் ஆறு பேரும் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட விசாரணையில் வெளிவந்துள்ள அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால் அவர்கள் 6 பேரில் ஒருவன் மைனர். “அவனே அப்பெண்ணை லாட்டரி ஷாப் அருகே அழைத்து வந்துள்ளான்.

அங்கிருந்த மற்ற 5 பேருடன் இணைந்து அவளை பலவந்தமாக குடிபோதைக்கு உள்ளாக்கி பலாத்காரம் செய்துள்ளான் அவன். மற்ற ஐவரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள்” என்று திலக் நகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 அப்பெண் மதுவால் மயக்கமடைந்ததும் அவர்கள் அப்பெண்ணை மாறி, மாறி பலாத்காரம் செய்துள்ளனர். அந்நேரத்தில் அங்கு வந்த ஆட்டோ ரிக்‌ஷா காரரைப் பார்த்தவுடன் அவர்கள் ஓடியுள்ளனர்.

மேலும், “அப்பெண்ணை நாங்கள் மீட்ட போது சுய நினைவு சுத்தமாக இல்லை. பக்கத்திலிருந்த மருத்துவமனையில் அப்பெண்ணை உடனடியாக அனுமதித்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

“பாதிக்கப்பட்ட அச்சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மேலும், இப்பலாத்கார சம்பவத்திற்கான போதிய ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன” என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அச்சிறுமி இன்னும் மயக்கத்தில் இருப்பதாகவும், அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் இது 2வது வழக்கு என்றும் அவர்கள் அதிர்ச்சியுடன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply