கொட்­டாஞ்­சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மெஸஞ்சர் வீதியில் உள்ள தங்­கு­மி­ட­மொன் றில் 2 வரு­டமும் 2 மாதங்­க­ளு­மான பெண் குழந்­தை­யொன்று பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த சம்­பவம் தொடர்பில் கொட்­டாஞ்­சேனை பொலிஸார் நபர் ஒரு­வரை தேடி வரும் நிலையில் விசா­ர­ணைகள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன.

இச்­சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

நேற்று முன் தினம் குறித்த தங்­கு­மி­டத்தில் தங்­கி­யி­ருக்கும் பெண் ஒருவர் தனது 2 வயதும் 2 மாதங்­களும் நிரம்­பிய குழந்­தையை பிறி­தொரு பெண்­ணிடம் பார்த்­துக்­கொள்­ளு­மாறு கொடுத்­து­விட்டு சென்­றுள்ளார்.

இந் நிலையில் அன்­றைய தினம் இரவு 9 மணி­ய­ளவில் குழந்­தையை பார்த்­துக்­கொள்­வ­தற்­காக பொறுப்­பெ­டுத்த பெண்ணின் கணவர் என அறி­யப்­படும் நபர் குழந்­தையை அதன் தாயிடம் திருப்பி ஒப்­ப­டைத்­துள்ளார்.

குழந்­தையை தாய் பொறுப்­பேற்ற பின்னர் குழந்தை மயக்­க­முற்று விழுந்­துள்­ளது. இத­னை­ய­டுத்து குழந்தை உட­ன­டி­யாக பொரளை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது.

எனினும் அதி­காலை 2 மணி­யாகும் போது குழந்தை இறந்து விட்­ட­தாக வைத்­தி­யர்­களால் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் குழந்­தை­யா­னது பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் வைத்­தி­யர்­களால் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந் நிலையில் குழந்­தையின் தாயிடம் வாக்கு மூலம் பெற்­றுள்ள பொலிஸார், குழந்தையை தாயிடம் மீண்டும் ஒப்படைத்த நபரைத் தேடிவருகின்றனர். குறித்த நபர் பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

 

Share.
Leave A Reply