ஆப்கானிஸ்தானில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட குறைந்தது 6 பேர் பலியாகியுள்ளதுடன் 13 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
லோகர் மாகாணத்தின் தலைநகரான புலி அலாமில் பொலிஸ் வளாகமொன்றிற்கு வெளியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட லொறியொன்றைப் பயன்படுத்தி இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலை தாமே நடத்தியதாக தலிபான் தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளனர்.
தமது தலைவர் முல்லாஹ் ஓமர் இறந்து விட்டதாக தலிபான் தீவிரவாதிகள் கடந்த வாரம் உறுதிப்படுத்தியதையடுத்து அங்கு இடம்பெற்ற முதலாவது பிரதான தாக்குதலாக இது விளங்குகிறது.
தென் ஆப்கானிஸ்தானின் ஸாபுல் மாகாணத்தில் அந்நாட்டு இராணுவ உலங்குவானூர்தியொன்று விபத்துக்குள்ளாகி 17 பேர் உயிரிழந்துள்ள நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.