இலங்­கையின் பொதுத்தேர்தல் சூடு பிடித்­துள்ள நிலையில் செனல் -– 4 தொலைக்­காட்சி உள்­ளக விசா­ரணை தகவல் ஒன்றை வெளி­யிட்­ டுள்­ளது.

கம்­பஹா, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை, வன்னி மாவட்­டங்­களில் தமி­ழர்கள் ஒன்­றி­ணைந்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­ பிற்கே வாக்­க­ளிக்க வேண்டும் என புலம் பெயர் தமி­ழர்கள் சுட்டிக் காட்­டி­யுள்­ளனர்

இலங்­கையில் நடை­பெ­ற­வுள்ள பாராளு­மன்றத் தேர்­தலில் தமி­ழர்கள் மிகவும் விழிப்­புடன் நடந்து கொள்­ளு­மாறு உலகத் தமிழர் பேரவை கேட்டுக் கொண்­டுள்­ளது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு தமிழ் மக்கள் வாக்­க­ளிக்க வேண்டும் என அந்த அமைப்பு நேர­டி­யாகக் குறிப்­பி­ட­வில்லை.

ஆனால், வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் தமிழ் மக்­களின் தெரிவு அது­வா­கத்­தா­னி­ருக்க வேண்டும் என சுட்டிக் காட்­டப்­பட்­டுள்­ளது. தமிழர் பிரச்­சினை தொடர்­பாக கூட்­ட­மைப்பே வெளி­நா­டு­க­ளுடனும் சர்­வ­தேச அமைப்­புக்­க­ளு­டனும் தொடர்பு கொண்­டுள்­ளது.

தமிழர் பிரச்­சி­னைக்கு தீர்­வொன்றைப் பெற்றுக் கொடுக்க இலங்­கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கூட்­ட­மைப்பு கூறி வரு­கின்­றது. அத்­துடன் உலகத் தமிழர் பேர­வை­யு­டனும் கூட்­ட­மைப்பு நல்­லு­றவைப் பேணி வரு­கின்­றது.

எனவே, நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­தலில் தமிழ் மக்கள் மிகவும் விழிப்­புடன் ஒன்­றி­ணைந்து வாக்­க­ளிக்க வேண்டும். பிரச்­சினை தீர்­வுக்கு சர்­வ­தேச அழுத்தம் மிகவும் அவ­சியம் என்றும் உலகத் தமிழர் பேரவை குறிப்­பிட்­டுள்­ளது.

அதே நேரத்தில் சிங்­களக் குடி­யேற்­றங்கள் இடம்­பெற்ற பகு­தி­களில் எவ்­வாறு தமிழ்ப் பிர­தி­நி­தித்­துவம் பாது­காக்­கப்­படும் என்­பதில் புலம் பெயர் தமி­ழர்கள் பெரிதும் கவலை கொண்­டுள்­ளனர். இங்கு இடம்­பெ­று­கின்ற பொதுத்தேர்தல் தொடர்­பாக கருத்­த­ரங்­கு­களில் அவர்கள் இவ்­வி­ட­யத்­தையே முக்­கி­ய­மாகக் குறிப்­பி­டு­கின்­றனர்.

அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை, வன்னி மாவட்­டங்­களில் தமிழ்ப் பிர­தி­நி­தி­களின் தெரிவு உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என அவர்கள் குறிப்­பி­டு­கின்­றனர். தமிழ்ப் பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­டாமல் இருப்­ப­தற்­காக பல தமிழ் சுயேச்சைக் குழுக்கள் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் நான்கு தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வேண்டும். ஆனால், அதனை முறி­ய­டிப்­ப­தற்­கா­கவே பல தமிழ் சுயேச்சை குழுக்கள் போட்­டி­யி­டு­கின்­றன.

எனவே தமிழ் மக்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து வாக்­க­ளிப்பில் கலந்து கொள்ள வேண்டும்.

எனவே, தமிழ் மக்கள் அனை­வரும் உதி­ரி­க­ளுக்கு வாக்­க­ளிக்­காமல் கூட்­ட­மைப்பு வேட்­பா­ளர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க வேண்டும் என புலம் பெயர் தமிழ் மக்கள் வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர்.

தமிழ் மக்கள் ஒட்டு மொத்­த­மாக வாக்­க­ளித்தால் அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை, வன்னி மாவட்­டங்­க­ளி­லி­ருந்து 13 தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரி­வாகும் சந்­தர்ப்பம் ஏற்­படும். இதனை பல புலம் பெயர்ந்த தமி­ழர்கள் ஒலி, ஒளி அலை­களில் கூறி வரு­கின்­றனர்.

தமிழ் மக்கள் ஒற்­று­மை­யாக ஓர­ணியில் நின்று ஒரு தமிழ்க் கட்­சிக்கு வாக்­க­ளிப்­பதின் மூலம் இலங்கை அர­சுக்கு மாத்­தி­ர­மல்ல வெளி­நா­டு­க­ளுக்கும் ஒரு செய்­தியைக் கூறலாம்.

பொதுத்தேர்தல் குறித்து புலம்­பெயர் தமிழ் ஊட­கங்­களில் வழ­மைக்கு கூடுதல் அக்­கறை காட்டி வரு­வது பல­ருக்கும் வியப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. தாய­கத்தில் இருந்தும் பல வேட்­பா­ளர்­களை தொலை­பே­சியில் அழைத்து செவ்வி காண்­பது தற்­போது வாடிக்­கை­யாக இடம்பெற்று வரு­கின்­றது.

ஆனால், ஒரு­சில பிர­ப­ல­மான புலம் பெயர் தமிழ் அமைப்­புக்கள் பொதுத் தேர்தல் குறித்து எது­வித கருத்­தையும் வெளி­யி­டாமல் இருந்து வரு­கின்­றன. தாய­கத்தில் நடக்கும் தேர்­தலை அங்­குள்ள தமி­ழர்­களே முடிவு செய்ய வேண்டும்.

அதற்­காக இங்கு தேர்தல் பரப்­புரை செய்­வது பொருத்­த­மற்­றது. அங்கு மக்கள் தேர்ந்­தெ­டுக்கும் பிர­தி­நி­தி­க­ளுடன் நாம் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்தி எமது ஜன­நா­யகப் போராட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்டும்.

அமை­தியை கடைப்­பி­டிக்கும் புலம் பெயர் தமிழ் அமைப்­பு­களின் சுருக்­க­மான கருத்து இது. பெரும்­பா­லான புலம்­பெயர் தமி­ழர்கள் இதனை ஆத­ரிக்­கின்­றனர்.

அவ­திக்­குள்­ளான தாயக மக்கள் அங்­குள்ள சூழ்­நி­லை­க­ளுக்­கேற்ப முடி­வு­களை எடுப்­பார்கள்.

புலம்­பெயர் நாடு­க­ளி­லுள்ள சூழ்­நி­லைக்­கேற்­ற­வாறு அவர்கள் முடி­வு­களை மேற்­கொள்ள முடி­யாது. மிகப் பெரிய பாது­காப்பு அரணை இழந்­த­வர்கள் அவர்கள். அத­னையும் கருத்திற் கொண்டே அங்­குள்ள மக்கள் முடி­வு­களை மேற்­கொள்­வார்கள்.

அதே நேரத்தில் வட­மா­காண சபை முதல்வர் சி.வி.விக்­னேஸ்­வரன் அமெ­ரிக்­காவில் இருந்த போதுதான் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு தேர்தல் அறி­விக்­கப்­பட்­டது. முதல்வர் அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து லண்டன் வந்­தி­ருந்த போது அவரை சிலர் சந்­தித்­த­தாக இணை­யத்­தளச் செய்­தி­யொன்று தெரி­விக்­கின்­றது.

அச்­சந்­திப்பின் போது முதல்­வரை கூட்­ட­மைப்­பிற்கு எதி­ரான களத்தில் இறக்­கு­வ­தற்கு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும் அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இருப்­பினும் முதல்வர் மிக உறு­தி­யாக இருந்­த­தினால் அந்த முயற்சி கைகூ­ட­வில்லை.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை விட்டு வில­கு­வ­தற்கு அவர் தயா­ராக இல்லை என்­பதே அந்த உறு­தி­யாகும். அதனை அவர் பொதுக்­கூட்டம் ஒன்றின் போது, லண்­டனில் தெரி­வித்­தி­ருந்தார் என்­பதை கடந்த வாரங்­களில் நாம் தெரித்­தி­ருந்தோம்.

செனல்– 4 தொலைக்­காட்சி இலங்­கையில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்கள் குறித்து பல்­வேறு ஆவ­ணங்­களை வெளி­யிட்­டி­ருந்­தது. மீண்டும் அந்த ஆவ­ணங்­களை வெளி­யிட்ட செனல் –4 தொலைக்­காட்சி ஒரு கேள்­வி­யொன்­றையும் கேட்­டி­ருந்­தது.

போர்க்­குற்­றங்­களை விசா­ரணை செய்த ஐ.நா விசா­ர­ணைக்­குழு தமது அறிக்­கையில் உள்­நாட்டு விசா­ரணைப் பொறி­முறை ஒன்றை பரிந்­துரை செய்­துள்­ளதா என்­பதே அந்தக் கேள்­வி­யாகும்.

பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்ட உள்­நாட்டு விசா­ரணைப் பொறி­மு­றையை விசா­ர­ணைக்கு பரிந்­து­ரைப்­பது நியா­ய­மா­காது.

மேலும், உள்­நாட்டு விசா­ரணை பொறி­மு­றைக்கு வட­மா­காண முத­ல­மைச்சர் ஒத்­து­ழைப்பு வழங்­க­வுள்ளார் என ஐ.நா தக­வ­லொன்று குறிப்­பிட்­டுள்­ள­தையும் செனல் –- 4 தொலைக்­காட்சி வெளி­யிட்­டி­ருந்­தது.

ஆனால், வட­மா­காண முத­ல­மைச்­ச­ரிடம் நாம் இது பற்றி கேட்­ட­போது அவர் அதனை முற்­றாக மறுத்தார். தம்­முடன் ஐ.நா அதி­கா­ரிகள் எந்தத் தொடர்பும் வைத்­தி­ருக்­க­வில்­லை­யென்று அவர் குறிப்­பிட்­ட­தாக செனல்– 4 தொலைக்­காட்சி தெரி­வித்­தது.

ஆனால் ஐ.நா மனித உரிமை ஆணை­ய­கத்தின் பாது­காப்பில் உள்ள அறிக்கை விபரம் அது வெளி­யி­டப்­படும் வரை வெளியில் வர வாய்ப்­பில்லை. அந்த ஆணை­ய­கத்­தோடு தொடர்­பு­டைய மனித உரிமை அமைப்­புக்கள் இதனை உறு­தி­யாகத் தெரி­வித்­துள்­ளனர்.

விசா­ர­ணைக்­குழு முன் சாட்­சி­ய­ம­ளித்த சாட்­சி­களின் விப­ரங்கள் இரு­பது ஆண்­டு­க­ளுக்கும் மேலாக பாது­காப்பில் வைக்­கப்­படும் என உறு­தி­யாக்­கப்­பட்­டுள்­ளது. எக்­கா­ரணம் கொண்டும் அவை வெளி­வ­ரு­வ­தற்கு சாத்­தி­யமே இல்லை என ஆணை­யகம் மீண்டும் மீண்டும் குறிப்­பி­டு­கின்­றது.

இந்­நி­லையில் விசா­ரணை அறிக்­கையில் சில விப­ரங்கள் கசிந்­துள்­ள­தாகக் கூறு­வது எங்­ஙனம் என அந்த அமைப்­புக்கள் கேட்­கின்­றன.

ஆனால் செய்­தியை வெளி­யிட்­டுள்ள ஊடகம் செனல்– 4 போர்க்­குற்­றங்­க­ளுக்கு நியாயம் வேண்டும் என அந்த ஊடகம் போராடி வரு­கின்­றது. விசா­ர­ணைக்­கு­ழு­விடம் அது தமக்கு கிடைத்த சகல ஆதா­ரங்­க­ளையும் முன்­வைத்­துள்­ளதும் இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.

விசா­ர­ணைக்­கு­ழுவின் அறிக்­கைக்­கு­றித்து செனல் –- 4 ஊடகம் மிகுந்த அக்­கறை கொண்­டுள்­ளது. என­வேதான் அது நமக்கு கிடைத்த செய்­தியை சக­ல­ரு­டனும் பகிர்ந்­து­கொண்­டுள்­ளது.

ஆனால் அந்த செய்தி உண்­மையா என்ற கேள்­வி­யையும் அது எழுப்­பி­யுள்­ளது. விசா­ர­ணைக்­குழு விசா­ர­ணையை நீர்த்­துப்­போக செய்­யு­ம­ள­விற்கு இலங்கை அரசு செயற்­பட்டு வரு­வ­தாக அடிக்­கடி தக­வல்கள் வெளி­வந்து கொண்­டி­ருந்­தன.

உள்­ளக விசா­ரணை பொறி­மு­றைக்கு ஐ.நா தொழில் நுட்ப உத­வி­களை வழங்கும் என்று ஏற்­க­னவே செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன. ஆனால் அதற்கு எதி­ராக தமிழர் குடிசார் சமூகம் கடிதம் ஒன்றை ஐ.நாவுக்கு அனுப்பி வைத்­துள்­ளது.

இலங்கை அரசு ஐ.நா. வின் மேல் மட்­டங்­க­ளுடன் உள்­ளக விசா­ரணை குறித்து பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­வ­தாக இன்­னர்­சிட்டி பிரஸ் கருத்­தொன்றை வெளி­யிட்­டுள்­ளது. இதன் சாத்­தி­யப்­பாடு குறித்து அந்த மேல் மட்டம் ஆராய்ந்து வரு­வ­தா­கவும் அது குறிப்­பிட்­டுள்­ளது.

எனவே இந்த விட­யமே செனல் – – 4 தொலைக்­காட்சி செய்­திக்கு கார­ண­மாக இருக்­கலாம் என்றும் மனித உரிமை அமைப்­புக்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன. அதனை தவிர விசா­ர­ணைக்­கு­ழுவின் அறிக்­கையில் கசிவு ஏற்­பட சாத்­தி­ய­மில்­லை­யென்றும் அவை உறு­தி­யாகக் குறிப்­பி­டு­கின்­றன.

ஏற்­க­னவே போலி­யான ஐ.நா. விசா­ர­ணைக்­குழு அறிக்கை ஒன்றை வெளி­யிட மஹிந்த தரப்பு முயற்­சிப்­ப­தாக இலங்­கையில் சில ஊட­கங்கள் குறிப்­பிட்­டி­ருந்­தன. தேர்தல் நடை­பெற சில நாட்­க­ளுக்கு முன்பே அது வெளி­யி­டப்­ப­டலாம் என்றும் அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

அது குறித்து ஐ.நா. வின் கவ­னத்­திற்கும் கொண்டு வரப்­பட்­டி­ருப்­ப­தாக சர்­வ­தேச ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன. ஜெனீவா ஐ.நா பணி­மனை இது குறித்து விழிப்­புடன் இருப்­ப­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

போலி­யான அறிக்­கைகள் ஏதும் வெளி­யி­டப்­ப­டு­மே­யானால் அதனை உட­ன­டி­யாக மறுத்து அறிக்கை விடு­வ­தற்கும் ஜெனீவா தயா­ரா­கவே இருக்­கின்­றது.

சிங்­கள வாக்­கு­களை பெறு­வ­தற்­காக மஹிந்த தரப்பு இவ்­வா­றான போலி அறிக்கை ஒன்றை வெளி­யிட இருப்­ப­தாக தொடர்ச்­சி­யான தக­வல்கள் ஜெனீவா ஐ.நா பணி­ம­னைக்கு வந்து கொண்­டி­ருப்­ப­தாகக் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது.

இலங்கை அர­சாங்­கமும் இதில் மிக அக்­க­றை­யுடன் இருப்­ப­தா­கவே செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் செல்­வ­தி­னின்றும் மஹிந்­தவை நான் காப்­பாற்­றி­யுள்ளேன் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அடிக்­கடி குறிப்­பிட்டு வரு­வதும் இந்த அக்­க­றையின் வெளிப்­பாடே.

போலி­யான விசா­ர­ணைக்­குழு அறிக்கை வெளி­வ­ரு­வ­தற்கு ஜெனீவா ஐ.நா. பணி­மனை இட­ம­ளிக்கக் கூடாது என பிர­தமர் ரணில் தரப்பில் இர­க­சி­ய­மாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக மற்­றொரு இணை­யத்­தள செய்தி குறிப்­பி­டு­கின்­றது.

இலங்­கையில் பொதுத் தேர்தல் முடி­வ­டைந்­ததின் பின்பே விசா­ர­ணைக்­குழு அறிக்கை வெளி­யி­டப்­படும் என நாம் ஏற்­க­னவே குறிப்­பிட்­டி­ருந்தோம்.

அதிலும் பொதுத்­தேர்தல் 17ஆம் திகதி முடி­வுற்று தேர்தல் முடி­வுகள் 18ஆம் திகதி வெளி­யி­டப்­படும். இரண்டு நாட்கள் கழித்து அநே­க­மாக மனித உரிமைப் பேர­வையின் உறுப்பு நாடு­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­ப­டலாம் என்றே ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே­வே­ளையில் ஐ.நா விசா­ர­ணைக்­குழு அறிக்கை சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­திடம் பாரப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற கோரிக்கை ஐ.நாவிடம் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

புலம்­பெயர் தமிழ் அமைப்­புகள் பல இணைந்து இதற்­கான வரை­வொன்று தயா­ரித்­துள்­ளமை அனை­வரும் அறிந்த விடயம். இந்த வினாவில் பத்து லட்சம் பேரின் கையெ­ழுத்­துக்­களை திரட்டும் வேலைத்­திட்டம் கடந்த மார்ச் மாதத்தின் பின் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

ஆனால், அதில் இப்­போது 13 லட்சம் பேர் கையெ­ழுத்­திட்­டுள்­ளனர். ஐ.நா. விதி­மு­றை­க­ளுக்­க­மைய பத்து லட்சம் பேருக்கு மேல் கையெ­ழுத்­திட்டு விடுக்­கப்­படும் கோரிக்­கை­யொன்றை முக்­கிய ஆலோ­ச­னைக்கு எடுத்­துக்­கொள்ள வேண்டும்.

இருப்­பினும் செப்.ெ­டம்பர் மாதம் முதலாம் திகதி வரை மக்­களின் கையெ­ழுத்­துக்­க­ளுக்­காக கோரிக்கை மனு தாம­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. சுமார் இரு­பது லட்சம் கையெ­ழுத்­துக்­களைப் பெறலாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

ஐ.நாவில் மிகவும் பாரிய தாக்கம் ஒன்றை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய கோரிக்­கைக்கு மக்கள் ஆத­ரவும் சேர்ந்­துள்­ள­தினால் ஐ.நா விசா­ர­ணைக்­குழு அறிக்கையாலும் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என மனித உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Share.
Leave A Reply