தமிழ் மக்­களின் பிரச்­சினை தற்­போது சர்வ­தேச மட்­டத்தை அடைந்­துள்­ளது ஆனால் இன்னும் தீர்வு கிட்­ட­வில்லை. ஏறத்­தாழ 65 வரு­டங்­க­ளாக எமது போராட்டம் தொடர்­கின்­றது. தந்தை செல்­வா­வினால் பல அர­சியல் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

அதன்பின் 1985ற்கு பின் நீண்ட ஆயுத போராட்டம் 30 வரு­டங்­க­ளாக எமது இளை­ஞர்கள் ஆயுதம் ஏந்தி பல சாத­னை­களை நிலை­நாட்­டி­னார்கள். அப்­போ­ராட்­டமும் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி முடி­வுக்கு வந்­தது.

என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் திரு­கோ­ண­மலை மாவட்ட முதன்மை வேட்­பா­ள­ரு­மான இரா. சம்­பந்தன் தெரிவித்தார்.

புதன்­கி­ழமை இரவு 7மணி­ய­ளவில் திரு­கோ­ண­ம­லையில் உள்ள தனது இல்­லத்தில் பொது அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களை சந்­தித்து கலந்­து­­ரை­யாடும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், யுத்தம் முடிந்து 6வரு­டங்கள் கடந்த போதும் அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­பக் ஷ இந்­தி­யா­விற்கும், உலக நாடு­க­ளுக்கும் தமிழர் பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தாக கூறி பொறுப்பு கூறும் விட­யத்தில் இருந்து விலகி தமிழ் மக்­களை நசுக்­கு­வ­திலே குறி­யாக இருந்தார்.

இந்த நிலையில் 2011ஆம் ஆண்டு உலகின் வல்­ல­ர­சான அமெரிக்கா சென்று இரா­ஜாங்க அமைச்­சரை நாம் சந்­தித்தோம். போர்க் குற்­றங்கள் விட­யத்தில் சர்­வ­தேச விசா­ர­ணையை அதன் பின் இலங்கை எதிர்­கொண்­டது.

இவ்­வாண்டு புரட்­டாதி மாதம் வெ ளிவரும் இவ்­வ­றிக்கை இலங்கை அர­சி­யலில் பல அழுத்­தங்­களை எதிர்­கொள்­ளலாம். எனவே இந்­நி­லையில் இத்தேர்தல் சர்­வ­தேச ரீதியில் அதி ­முக்­கி­ய­மா­ன­தாகும்.

திரு­கோ­ண­ம­லையில் 5 தமிழ் கட்­சிகள் போட்­டி­யி­டு­கின்­றன. இவர்கள் யாரை பிர­தி­நி­தித்­துவப் படுத்­து­கின்­றார்கள்? இவர்கள் யாரை சந்­திக்­கின்­றார்கள்? இவர்கள் 5 வீதமான வாக்­கு­களை கூட பெற­மாட்­டார்கள்.

இவ்­வாக்­குகள் கூட எமக்கு கிடைக்க வேண்டும். இவ் வாக்­குகள் எமக்கு கிடைப்­பதன் மூலம் இரண்டு ஆச­னங்­களை நாம் பெறு­வ­துடன் போனஸ் ஆச­னத்­தையும் பெற முடியும்.

அபி­வி­ருத்தி என்­பது தேவை. ஆனால் 2ஆம் தர பிர­ஜை­க­ளாக வாழ முடி­யாது. இறைமை பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்டும்.

உள்ளக சுய நிர்ணய அடிப்படையில் காணி, பாதுகாப்பு, கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், கால்நடை வளர்ப்பு உட்பட சகல அதிகாரங்களும் பகிர்ந்தளிக்கக் கூடிய தீர்வை நாம் கேட்டு நிற்கின்றோம் என்றார்.

Share.
Leave A Reply