லிபிய கடற்­க­ரைக்கு அப்பால் சுமார் 600 குடி­யேற்­ற­வா­சி­க­ளுடன் புதன்­கி­ழமை மூழ்­கிய பட­கொன்றில் பய­ணித்த பலர் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­கி­றது.

மேற்­படி படகு லிபிய கடற்­க­ரை­யி­லி­ருந்து 25 கிலோ­மீற்றர் தொலைவில் மூழ்­கி­யி­ருந்­தது.

ஆரம்­பத்தில் அந்தப் படகில் பய­ணித்த நூற்­றுக்­க­ணக்­கானோர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அஞ்­சப்­பட்­டது. எனினும் அவர்­களில் சுமார் 400 பேர் உயி­ருடன் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் அக­திகள் முகவர் நிலையம் பின்னர் தெரி­வித்­தது.

இது­வரை 25 சட­லங்கள் மீட்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பலர் காணா­மல்­போ­யுள்­ள­தா­கவும் இத்­தா­லிய கரை­யோர காவல் படை­யினர் தெரி­வித்­தனர்.

இந்த ஆண்டு மத்­தி­ய­தரைக் கடலைக் கடந்து ஐரோப்­பா­விற்கு செல்லும் முயற்சியின் போது 2,000 க்கு மேற்பட்ட குடியேற்றவாசிகள் உயிரிழந்திருந்தனர்.

Share.
Leave A Reply