ஆப்­கா­னிஸ்­தா­னில் வியா­ழக்­கி­ழமை நடத்­தப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தலில் 3 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் உட்­பட குறைந்­தது 6 பேர் பலி­யா­கி­யுள்­ள­துடன் 13 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

லோகர் மாகா­ணத்தின் தலை­ந­க­ரான புலி அலாமில் பொலிஸ் வளா­க­மொன்­றிற்கு வெளியில் வெடி­பொ­ருட்கள் நிரப்­பப்­பட்ட லொறி­யொன்றைப் பயன்­ப­டுத்தி இந்தத் தற்­கொலைக் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

இந்தத் தாக்­கு­தலை தாமே நடத்­தி­ய­தாக தலிபான் தீவி­ர­வா­திகள் உரிமை கோரி­யுள்­ளனர்.

தமது தலைவர் முல்லாஹ் ஓமர் இறந்து விட்­ட­தாக தலிபான் தீவி­ர­வா­திகள் கடந்த வாரம் உறு­திப்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து அங்கு இடம்­பெற்ற முத­லா­வது பிர­தான தாக்­கு­த­லாக இது விளங்­கு­கி­றது.

தென் ஆப்­கா­னிஸ்­தானின் ஸாபுல் மாகா­ணத்தில் அந்­நாட்டு இரா­ணுவ உலங்­கு­வா­னூர்­தி­யொன்று விபத்துக்குள்ளாகி 17 பேர் உயிரிழந்துள்ள நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply