வாஷிங்டன்: நிலாவின் கருப்புப் பகுதியான பின்புறத்தை படம் பிடித்து வெளியிட்டுள்ளது நாசா. இதுவரை பால் நிலாவைப் பார்த்து வந்த உலகத்திற்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம்.

நாம் பூமியில் இருந்த படி வானில் பார்ப்பது நிலாவின் ஒரு பக்கம் மட்டும் தான். அதன் மற்றொரு பக்கம் வெளிச்சமில்லாத இருள் நிறைந்தது. ஆனால், அந்தப் பக்கத்தை பூமியில் இருந்து பார்க்க முடியாது.

06-1438867290-nasa-astronaut-scott-kelly-answers-twitter-questions-from-space2-600

டைட்லி லாக்டு…

காரணம் நிலாவானது தனது சுய அச்சில் சுழல்வதால், எப்போதும் பூமிக்கு அது தன்னுடைய ஒரு பக்கத்தை மட்டுமே காட்டியபடி இருக்கிறது. இதனை விஞ்ஞானிகள் டைட்லி லாக்டு என்கிறார்கள்.

டிஸ்கவர் செயற்கைக்கோள்…

06-1438867302-nasa-astronaut-scott-kelly-answers-twitter-questions-from-space3-600இந்நிலையில், அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் டிஸ்கவர் செயற்கைக்கோள் நிலாவின் மறுபக்கத்திலுள்ள இருளான பகுதியைப் புகைப்படம் எடுத்துள்ளது.

எபிக் கேமரா…

பூமியிலிருந்து 1.6 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் பயணித்து வரும் இந்த செயற்கைக்கோளில் எபிக் (The Earth Polychromatic Imaging Camera) என்ற கேமரா உள்ளது. இந்த கேமரா சோதனைக்காக பல புகைப்படங்களை படம்பிடித்து அனுப்புவது வழக்கம்.

06-1438867607-the-earth-polychromatic-imaging-camera34-600

நிலாவின் இருண்ட பகுதி…

அந்த வகையில் கடந்த மாதம் 16-ம் தேதி மதியம் 1.20 மணி முதல் 6.15 மணி வரை எடுக்கப்பட்ட காட்சிகளில் நிலாவின் இருட்டான பகுதி படம்பிடிக்கப்பட்டுள்ள

லூனா – 3 விண்கலம்…

இதற்கு முன்னதாக, 1959-ம் ஆண்டு சென்ற சோவியத்தின் லூனா-3 விண்கலம் மட்டுமே நிலவின் மறு பக்கத்தை புகைப்படம் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Share.
Leave A Reply