பாடசாலை அதிபரினால் உயர்தர பரீட்சைக்கான அனுமதி அட்டை வழங்க மறுக்கப்பட்டதால் தற்கொலை செய்துக் கொண்ட வவுனியாவைச் சேர்நத மாணவி குணசேகரன் திவ்யாவின் இறுதி சடங்கு இன்று நடைபெற்றது.

20150809_1130121-e1439106956471இதன் போது மாணவியின் பூதவுடலை அவரது பாடசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, பொது மக்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

குறித்த மாணவியின் ஊரான நெலுங்குளத்தில் இருந்து, பண்டாரிக்குளம் விபுலாந்தா வித்தியாலத்துக்கு பூதவுடல் எடுத்து செல்லப்பட்டது.

20150809_1129061-e1439107048604இதன் போது பிரதேச மக்கள் அமைதியீனமாக நடந்து கொண்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொது மக்களிடம் காவற்துறையினர் விளக்கப்படுத்த முற்பட்ட போது, இரண்டு தரப்புக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

20150809_1138321-e1439107177324வவுனியா – பண்டாரிக்குளம் விபுலாநந்தா வித்தியாலத்தின் மாணவியான அவர், தமது உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான அனுமதி அட்டையை வழங்க குறித்த பாடசாலையின் அதிபர் மறுத்ததை அடுத்து கடந்த ஆறாம் திகதி தற்கொலை செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply