கல்லூரி காலத்தில் யாருக்கும் காதல் இருக்கலாம். அது சககஜமும் கூட. ஆனால் அதிலிருந்து வந்த பிறகு மீண்டும் திரும்பிப் பார்க்கக் கூடாது என்று நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.

குழந்தை பிறந்த பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய், இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

சமீபத்தில் மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த அவரிடம், “இந்த வயதிலும் அழகை அப்படியே பராமரிக்கிறீர்களே.. அதன் ரகசியம் என்ன?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராய், “எனது அழகு ரகசியம் என்பது பழைய வாழ்க்கையை திரும்பி பார்க்காமல் இருப்பதுதான்.

என் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நடந்திருக்கின்றன. இப்போது அவற்றில் இருந்து விடுபட்டு புது வேலையை துவங்கி இருக்கிறேன்.

நான் இப்போது திருமணம் ஆனவள். என் குடும்பத்தின் கௌரவத்தையும் மரபையும் கட்டிக்காக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதிலிருந்து எப்போதும் நழுவ மாட்டேன்.

யாருக்கும் காதல் இருக்கலாம். கல்லூரி வாழ்க்கையில் காதலிப்பது சகஜமானது. ஆனால் அதில் இருந்து வெளியே வந்த பிறகு திரும்பி பார்க்கக் கூடாது. நினைக்கவும் கூடாது. அதுதான் வாழ்க்கைக்கு நல்லது,” என்றார்.

Share.
Leave A Reply