நாட்­டைப்­ பி­ரிக்­கு­மாறு நாங்கள் கோர­வில்லை. ஆனால் கௌர­வ­மாக சுய­ம­ரி­யா­தை­யுடன் பக்­கு­வ­மாக பாது­காப்­பாக எமது நியா­ய­பூர்­வ­மான அபி­லா­ஷைகளை நிறை­வேற்றி சமத்­து­வ­மான மக்­க­ளாக நாங்கள் வாழ விரும்­பு­கின்றோம் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரிவித்தார்.

மட்­டக்­க­ளப்பில் நேற்றுமுன்தினம் சனிக்­கி­ழமை நடை­பெற்ற தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­சாரக் கூட்­டத்தில் உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

மட்­டக்­க­ளப்பு தனியார் பஸ் தரிப்பு நிலை­யத்­திற்கு முன்­பாக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி பிரேம்நாத் தலை­மையில் நடை­பெற்ற இக் கூட்­டத்தில் தொடர்ந்­து­ரை­யாற்­றிய சம்­பந்தன் நாட்­டைப்­பி­ரிக்­கு­மாறு நாங்கள் கோர­வில்லை.

ஆனால் கௌர­வ­மாக சுய­ம­ரி­யா­தை­யுடன் பக்­கு­வ­மாக பாது­காப்­பாக எமது நியா­ய­பூர்­வ­மான அபி­லாஷைகளை நிறை­வேற்றி சமத்­து­வ­மான மக்­க­ளாக நாங்கள் வாழ விரும்­பு­கின்றோம்.

அதற்கு மேல­தி­க­மாக நாங்கள் எதையும் கேட்­க­வில்லை. இறைமை பகிர்ந்­த­ளிக்­கப்­பட்டு சுதந்­தி­ர­மாக எவ்­வித தடை­யு­மில்­லாமல் சமஷ்டி அடிப்­ப­டையில் தீர்வை ஏற்­ப­டுத்­து­மாறு வலி­யு­றுத்­தி­யுள்ளோம். அதி­காரம் பகிர்ந்­த­ளிக்­கப்­படல் வேண்டும்.

எமது தமிழ் மக்­க­ளு­டைய அன்­றாட விட­யங்கள் தொடர்­பாக பொரு­ளா­தார சமூக கலா­சார அர­சியல் ரீதி­யான விட­யங்கள் தொடர்­பாக இணைந்த வட கிழக்கில் எவ­ருக்கும் எவ்­வி­த­மான பாதிப்­பு­மில்­லாமல் எவ­ருக்கும் பாதிப்பு ஏற்­ப­டாத வகையில் வாக்­கு­று­திகள் கொடுக்­கப்­பட்டு இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்தை ஏற்றுக்கொண்ட அடிப்­ப­டை­யிலும் 13 ஆவது திருத்­தத்தின் ஊடா­கவும் வடக்கு, கிழக்கும் இணைக்­கப்­படல் வேண்டும். அது அர­சியல் அல­காக இருக்க வேண்டும் என்­ப­தையும் நாங்கள் கூறி­யி­ருக்­கின்றோம்

ஒரு­மித்த நாட்­டுக்குள் நாட்டை பிரிக்­காமல் நாடு பிளவுபடாமல் எவ்­வி­த­மான அர­சியல் தீர்வு வர­வேண்­டு­மென்­பதை எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெளிவாக நாங்கள் கூறி­யி­ருக்­கின்றோம்.

இன்­றைய சூழலில் நிலை­மைகள் மாறி­யி­ருக்­கின்­றன. ஒரு பெரும்­பான்­மையின் அடிப்­ப­டையில் இந்த இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு வரப்­போ­கின்­றதா அல்­லது நீதியின் அடிப்­ப­டையில் நியா­யத்தின் அடிப்­ப­டையில் உலகின் பல் வேறு நாடு­களில் தற்­போது இருந்து வரு­கின்ற அர­சியல் ஒழுங்­கு­களின் பிர­காரம் தனித்­து­வ­மான இனத்தைச் சார்ந்த மக்கள் தனித்­து­வ­மான மதத்­தினை சார்ந்த மக்கள் தனித்­து­வ­மாக மக்­க­ளுக்கு கொடுக்­கப்­பட்ட அதி­கா­ரங்­களின் அடிப்­ப­டையில் இந்த நாட்டில் ஒரு அர­சியல் தீர்வு ஏற்­படப் போகின்­றதா என்­பது முக்­கி­ய­மான கேள்­வி­யாகும்.

பத்து இலட்சம் தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியே­றி­யி­ருக்­கின்­றார்கள். 5 இலட்சம் மக்கள் நாட்டில் குடி­பெ­யர்ந்­தி­ருக்­கின்­றார்கள். அவர்கள் இன்னும் மீள் குடி­யேற்­றப்­ப­ட­வில்லை.

ஒன்­றரை இலட்சம் மக்கள் வீடி­ழந்­துள்­ளார்கள். போர் நடந்த காலத்தில் மாத்­திரம் சுமார் எழு­ப­தா­யிரம் மக்கள் இறு­திக்­கட்­டத்தில் உயி­ரி­ழந்­துள்­ளார்கள்.

நாங்கள் பேர­ழி­வு­களை சந்­தித்­துள்ளோம். இது தொடர்­க­தை­யாக இருக்­கப்­போ­கின்­றதா இவை தொடர்­வ­தாக இருந்தால் தமிழ் தேசியம் இந்த நாட்டில் அழிக்­கப்­படும். இன அழிவு ஏற்­படும். இன அழிவு ஏற்­ப­டாமல் இருப்­பதாக இருந்தால் இந்த நாட்டில் நியா­ய­மான நிரந்­த­ர­மான உறு­தி­யான நடை­மு­றைப்­ப­டுத்தக் கூடிய நிலை நிற்கக் கூடிய ஒரு அர­சியல் தீர்வு வர­வேண்­டி­யது அத்­தி­யா­வ­சி­ய­மாகும்.

அது தான் எமது நிலைப்­பாடு. இதற்கு எல்­லோரும் பதில் சொல்ல வேண்­டிய நிலைமை இந்த தேர்தல் முடிந்த பிறகு ஏற்­படும். ஆகவே இதற்­காக தமிழ் மக்­க­ளு­டைய பங்­க­ளிப்பு மிக முக்­கி­ய­மா­ன­தாகும்.

இதில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் பங்­க­ளிப்பும் முக்­கி­ய­மான பங்­க­ளிப்­பாகும்.யாழ்ப்­பாணம் மாவட்­டத்­திற்கு பிறகு தமிழ் மக்கள் கூடு­த­லாக வாழ்­வது மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில். இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

திரு­மலை வட மாகா­ணத்­திற்கும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திற்­கு­மி­டையில் பால­மாக அமைந்­தி­ருக்­கின்­றது. இந்த தேர்தலில் நாம் இரு­பது ஆச­னங்­களைப் பெறுவோம் என எதிர்பார்க்­கின்றோம்.

யாழ்ப்­பா­ணத்தில் 6 உறுப்­பி­னர்­க­ளையும், வன்­னியில் 5 உறுப்­பி­னர்­க­ளையும், மட்­டக்­க­ளப்பில் 4 உறுப்­பி­னர்­க­ளை யும் அம்­பா­றையில் ஒரு உறுப்­பி­னரை பெற­வேண்டும்.

திரு­கோ­ண­ம­லையில் இரண்டு உறுப்­பி­னர்­களைப் பெற­வேண்டும். தேசியப் பட்­டி­யலில் இரண்டு உறுப்­பினர்­களைப் பெற வாய்ப்­புண்டு. மொத்­த­மாக இரு­பது உறுப்­பி­னர்­களை பெற­வேண்டும்.

மட்­டக்­க­ளப்பில் நிச்­ச­ய­மாக நான்கு உறுப்­பி­னர்­களை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பெற­வேண்டும். அது நமக்கு அத்­தி­யாவ­சி­ய­மான ஒரு தேவை. வடக்கும் கிழக்கும் இணைந்து ஒன்­றாக இருப்­ப­தற்கு மட்­டக்­க­ளப்பில் நான்கு ஆச­னங்­களைப் பெற்று வெற்­றியை அடைய வேண்­டி­யது நமக்கு அத்­தி­யா­வ­சி­ய­மான தேவை.

அதை உணர்ந்து மட்­டக்­க­ளப்பில் வாழ்­கின்ற தமிழ் மக்கள் அனை­வரும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை ஆத­ரிக்க வேண்டும்.

தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை ஆத­ரிப்­பது ஒரு புனி­த­மான கடமை. தற்­போது வாழும் மக்­க­ளுக்­கா­கவும் பின் சந்­த­தி­யி­ன­ருக்­கா­கவும் நாங்கள் நிறை­வேற்ற வேண்டிய கடமையை நாங்கள் தவறக் கூடாது.

இது நமது உரிமைகளுடன் சம்பந்தப்பட்ட ஒரு போராட்டம். நமது உரிமைகள் ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும்.

அவை நியாயமானவை. அவை நீதியா னவை, அவற்றை மறுப்பது கடினம் என்ற அபிப்பிராயம் இன்று பரவலாக பேசப்பட்டு வருகின்றது. அதை உறுதி செய்யக் கூடியவாறு தமிழ் மக்களின் தேர்தல் தீர்வு அமைய வேண்டும்.

அவ்வாறான ஒரு வெற்றியை ஏற்படுத் துவது தமிழ் மக்களின் புனிதமான கடமை. ஒரு போதும் நாங்கள் கைவிடமாட்டோம். இந்தப்பிரச்சினையை விரைவில் நாங்கள் தீர்ப்போம் என மேலும் அவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply