மாத்தளை மெதிகம பகுதியில் நேற்று மாலை பொலிஸ் காவலரணுக்குள் புகுந்த குழுவினர் அங்கிருந்த பொலிஸ்காரர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதன்போது சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும் சார்ஜன்ற் ஒருவரும் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதன்போது சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும் சார்ஜன்ற் ஒருவரும் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த பொலிஸார் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதலை நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு அரசியல் கட்சி ஆதரவாளர்களுக்கிடையிலான மோதலைத் தடுக்க முற்பட்ட நிலையிலேயே ஒரு குழுவினர் பொலிஸார் மீது இந்த வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு மோதலில் ஈடுபட்ட குழுக்கள் அடித்து விரட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply