பிறந்த பச்சிளம் குழந்தை தாயை விட்டு வரமாட்டேன் என அவரது முகத்தை பிடித்துக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பிரபலமாகியுள்ளது.
இந்த வீடியோ முன்பும் கூட பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஒரு பச்சிளம் குழந்தையின் வீடியோ மிகவும் பிரபலமாகியுள்ளது.
அந்த வீடியோவை பார்ப்பவர்கள் அனைவரும் என்ன ஒரு பாசக்கார குழந்தை என்று சொல்லும் அளவுக்கு உள்ளது.
வீடியோவின் விவரம், பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. நர்ஸ் ஒருவர் குழந்தையை சுத்தம் செய்ய தூக்கிச் செல்ல முயன்றால் அது தனது பிஞ்சுக் கரங்களால் தாயின் முகத்தை பிடித்துக் கொண்டு வர மாட்டேன் என அடம்பிடிக்கிறது.
அதையும் மீறி நர்ஸ் குழந்தையை தூக்கியபோது அது அழத் துவங்கிவிட்டது. மீண்டும் தாயின் முகத்தின் அருகில் கொண்டு சென்ற உடன் அழுகையை நிறுத்திவிட்டு அமைதியாகிவிட்டது.
இந்நிலையில் மயக்கத்தில் இருந்த தாய் லேசாக கண் விழித்து தனது குழந்தையிடம் பேசுகிறார். இந்த வீடியோ முன்பும் கூட சமூகவலைதளங்களில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மீண்டும் பலர் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்.