வாழ்க்கையில் ஏதும் இல்லாமல் எல்லாவற்றையும் இழந்துவிட்ட பின்பும் கூட, நாம் வாழ்வதற்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். அப்படிப்பட்ட காரணத்தைக் கண்டுபிடிப்பவர்கள் சாதனையாளர்கள் ஆகிறார்கள்.

அப்படியொரு சாதனையாளன்தான் ஆறு வயதே நிரம்பிய ஐசயா பேர்ட் (isaiah bird). நியூயார்க்கில் வாழ்ந்து வரும் ஐசயா பேர்ட், தங்குவதற்கு என்று வீடும் இல்லை, நடப்பதற்கு என்று கால்களும் இல்லை.

பிறக்கும் போதே கால்கள் இல்லாமல் பிறந்த ஐசயா, தன் குடும்பத்துடன் ஒரு சர்ச்சில் கூடாரம் போன்ற இடத்தில் வசித்து வருகிறான்.

இப்படியொரு மோசமான சூழ்நிலையில் பிறந்த ஐசயா, இப்பொழுது ஒரு மல்யுத்த வீரன். இந்த சிறுவனை கண்ட ரோட்ரீகஸ் என்ற மல்யுத்த பயிற்சியாளர், இவனை கைகளை மல்யுத்த பக்கம் நடக்க வைத்துவிட்டார்.

மல்யுத்தத்திற்கு கைகள்தான் தேவை, கால்கள் இல்லை என்பதால் விளையாட தொடங்கிய ஐசயா, இன்று அவனுடன் மல்யுத்தம் செய்யும் சிறுவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறான். கால்கள் இல்லாததால் மற்ற சிறுவர்களை விட ஐசயா அதிக வேகத்துடன் சண்டையிட வேண்டும்.

ஆனால் ஐசயாவோ எல்லாத் தடைகளையும் மீறி கடந்த ஆண்டில், அதிக அளவிலான போட்டிகளை வென்று, தற்போது மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளான்.

கால்கள் இல்லாமல் சண்டையிட்டு, தன் போட்டியாளர்களை வீழ்த்திவிட்டு ஒய்யாரமாக அமர்ந்து, ” I love to win, I am the gladiator, I am the champion” என்று சொல்வதை விடவா வேறு தன்னம்பிக்கை வார்த்தைகள் இருந்துவிடப் போகின்றன.

இந்த சிறுவனின் சாதனையை காண வீடியோவை பாருங்கள்…

Share.
Leave A Reply