உளவுத்துறை தகவல்
புலிகள் அமைப்பு கட்டுப்பாடன ஒரு அமைப்பு பிரபாகரன் தனிப்பட்ட ரீதியில் தனக்கென்று சில ஒழுங்கு முறைகளை வகுத்துச் செயற்படுபவர்.
அவரது உறுப்பினர்கள் கட்டுப்பாட்டை மீறினால் கடுமையாக நடந்து கொள்பவர். இவை போன்ற விபரங்களை மாநில உளவுத்துறை மூலம் எம்.ஜி.ஆர். பெற்றிருந்தார்.
கலைஞர் கருணாநிதி ரெலோ அமைப்பை கிட்டத்தட்ட தத்தெடுத்தது போலவே தனக்கு ஆதரவாக வைத்திருந்தார்.
‘ரெலோ’ அமைப்பு கட்டுப’பாடு விடயத்தில் ஊட்டைகள்நிறைந்தது. ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு விதமாக செயற்படுவார்கள், என்றெல்லாம் தமிழக உளவுத்துறை எம.ஜி.ஆரிடம் சொல்லி வைத்திருந்தது.
இந்த இடத்தில் ஈழப்போராளி அமைப்புக்கள் விடயத்தில் இந்திய – தமிழக உளவுத்துறைகளது நடவடிக்கை பற்றி சுருக்கமாக கூறவேண்டியிருக்கிறது.
ஈழப்போராளிகள் அமைப்புக்கள் குறித்து இந்தியாவில் நான்கு உளவுத்துறை அமைப்புக்கள் கண்காணித்து வந்தன.
1. அந்திய ஆய்வு -பகுப்பாய்வுப் பிரிவான ‘றோ’ (RAW)
2. இந்திய மத்திய புலனாய்வு பிரிவு. (சி.பி.ஐ)
3. இந்திய இராணுவத்தின் உளவுப்பிரிவு.
4. தமிழக பொலிஸ் உளவுத்துறையின் விஷேச பிரிவான ‘கியூ’ பிரிவு.
இதில் ‘றோ’ மட்டுமே மத்திய அரசின் முடிவுகளுக்கேற்ப போராளி அமைப்புக்களோடு நேரடித் தொடர்பு கொண்டிருந்தது.
பயிங்சி, ஆயுதம், நிதி மூன்றும் ‘றோ’ மூலமாகவே இயக்கங்களுக்கு வழங்கப்பட்டமையால் இந்திய அரசின் பிரதிநி போலவே இயக்கங்களோடு ‘றோ’ நடந்து கொண்டது.
ஏனைய உளவுப் பிரிவுகள் போராளிகளோடு நட்பு ரீதியில் பழகி தமக்குத் தேவையான விபரங்களைப் பெற்றுக் கொள்வதோடு நின்று கொண்டன.
எங்கெங்கே இயக்க முகாம்கள் இருக்கின்றன எத்தனை பேர் இருக்கிறார்கள் போன்ற விபரங்களை சேகரிப்பதோடு அவை இருந்துவிட்டன.
‘றோ’ வோடு தொடர்பு இருந்தமையாலும் தமிழக மக்களது போராதரவு இருந்தமையாலும் ஏனைய உளவுப் பிரிவுகளை போராளி அமைப்புக்கள் பொருட்டாகக் கொள்ளவில்லை.
அவர்கள் கேட்ட விபரங்களைக் கூட சரியாக கொடுப்பதுமில்லை
உதாரணமாக, ஒரு முகாமில் நூறு பேர் இருந்தால் 50 பேர் என்று முகாம் பொறுப்பாளர் சொல்வார்.
‘றோ’ பிரிவு கேட்டால் மட்டும் முகாமில் நூறு பேர் இருந்தாலும் இருநூறு பேர் இருக்கிறார்கள் என்று பொறுப்பாளர் சொல்லிவிடுவார்.
அது ஏன்? ஆயுதம் அதிகம் பெற வேண்டுமானால் உறுப்பினர் தொகையை உயர்த்திதானே காட்ட வேண்டும்!
மோகனதாஸ்
தமிழ்நாடு பொலிஸ் உளவுத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்தவர் கே.மோகனதாஸ் இவர்தான் பின்னர் தமிழக பொலிஸ் டி.ஜி.பியாகவும் இருந்தவர்.
மோகன்தாசுக்கும் இலங்கை உளவுத்துறைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஈிப் போராளி அமைப்புக்களுக்கு சந்தேகம் இருந்தது.
அதனால் தமிழக உளவுத்துறைக்கு சரியான விபரங்கள் கிடைக்கக்கூடாது என்று விழிப்பாக இருந்தனர்.
ஆனால் மோகன்தாஸ் எம்.ஜி.ஆருக்கு வலதுகரம் போல இருந்தார். எம்.ஜி.ஆருக்கு அவர் சொன்ன தகவல்களை பொிதும் நம்பினார்.
புலிகளுக்கு புகழரம்
ஈழப் போராளி அமைப்புக்கள் குறித்து மோகனதாஸ் எம்.ஜி.ஆருக்கு என்ன சொல்லியிருப்பார் என்பதை அறியவேண்டுமா?
பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் மோகனதாஸ் ஒரு புத்தகம் எழுதியிருந்தார். “எம்.ஐி.ஆர் நிழலும் நியமும்” என்பது அதன் பெயர்.
அப் புத்தகத்தில் ஈழப்போராளிகள் அமைப்பு பற்றி மோகனதாஸ் கூறியிருப்பது இதுதான்:
″மத்திய அரசு அமைப்புகள் செய்த முதல் தவறு. பயிற்சிக்கான கையாட்களாக அவை “டெலோ” பிரிவினரை தேர்ந்தெடுத்ததே.
அந்தப் பிரிவில் குற்றவாளிகளும், கொலைகாரர்களும் இருந்தனர். விடுதலைப் புலிகள், ஈ.பி.ஆா. எல். எப், ப்ளாட் (புளொட்) அமைப்புகளுக்கு இருந்த தீவிர இலட்சியப் பிடிப்பு “டெலோ” இல்லை.
ஆனால் அவர்கள் மத்திய அரசைப் பொறுத்தவரை “ஆமாம் சாமிகள்” இந்த பாராபட்சம் மற்றப் போராளிகள் பிரிவுகளை வருத்தப்படுத்தியது.
எல்.ரி.ரிக்கு உயர்ந்த இலட்சிய ஈடுபாடு இருந்தது. கவர்ச்சிகரமான அதன் தலைவர் பிரபாகரன் தலைமையில் போராளிகள் கட்டுப்பாட்டுடன் இயங்கினார்கள்.
அவ்வப்போது நான் எம்.ஐி.ஆரிடம் போராளிகள் பற்றி சொல்லி வந்தேன். போராளிகளது தலைவர்களை குறிப்பாகப் புலிகளை சந்திக்க விரும்புவதாக அவர் என்னிடம் தெரிவித்தார்.
எம்.ஐி. ஆருக்கும், புலிகளது தலைவர் பிரபாகரனுக்கும் ஒரு பிணைப்பு ஏற்பட்டுவிட்டது.
தனக்கே உரித்தான உள்ளுணர்வு மூலம் எம்.ஐி.ஆர் புலிகளுக்கும் பிற அமைப்புகளுக்கும் உள்ள வேறுபாடுகளை புரிந்து கொண்டார்.
அதன் விளைவாக எம.ஐி.ஆர் பிற்காலத்தில் அந்த இயக்கத்துக்கு தனது சொந்த பணத்திலிருந்தும், அரசு நிதியிலிருந்தும் வெவ்வேறு சமயங்களில் உதவி செய்தார்.″ இவ்வாறு கூறியிருக்கிறார் மோகனதாஸ்.
தனது உளவுத்துறை மூலம் பெற்ற விபரங்களை வைத்த புலிகளை அணைத்துக்கொண்டார் எம.ஐி.ஆர் .
கலைஞர் கருணாநிதிக்கு மட்டும்தான் ஈழப்போராளி அமைப்புகளிடம் செல்வாக்கு இருக்கிறது எண்ணத்தைத் தவறாக்குவதும் எம.ஐி.ஆரின் திட்டமாக இருந்தது.
இந்த விடயத்திலும் எம.ஐி.ஆரிடம் கலைஞர் தோற்றுத்தான் போனார். எம.ஐி.ஆரின் மறைவின் பின்னர் ரெலோவை கைவிட்டு புலிகளை முற்றுமுழுதாக ஆதரித்தார் கலைஞர்.
எம.ஐி.ஆர் பதவியில் இருந்தபோது ரெலோ உறுப்பினர்கள் பலரைக் கடுமையான சட்டங்களின் கீழ் சிறையில் தள்ளியிருந்தார். கலைஞர் பதவிக்கு வந்த பின்னரும் அவர்களில் சிலர் சிறையில் இருந்தனர்.
மின்கம்பத்தில் தொங்கிய சடலங்கள்: 84 இல் ஒரு சங்கிலியன் பஞ்சாயத்து.
சமூக விரோதிகள் ஒழிப்பு
1984 இல் வடக்கில் சமூக விரேதிகள் ஒழிப்பு தீவிரமாக நடந்தது. பொலிஸ் நிலையங்கள் பல மூடப்பட்டமையால் சமூக விரேதிகளுக்கு கொண்டாட்டமாகிவிட்டது.
வீடுகளில் புகுந்து கொள்ளை,பெண்களை பலாத்காரம் செய்தல், வீதிகளில் சங்கிலி பறிப்பு என்று சமூக விரோதிகளது அட்டகாசம் அதிகமாகியது.
சுழிபுரத்தை சேர்ந்தவர் சின்னையா சிவபாலன். 21 வயது. சுழிபுரம், பண்ணடத்தரிப்பு பகுதியில் பிரபலமான உள்ளூார் சண்டியர்.
05.03. அன்று சின்னையா சிவபாலன் பண்டத்தரிப்புச் சந்தியில் சூட்டுக் காயங்களோடு செத்துக்கிடந்தார்.
பிணத்தின் அருகே ஒரு துண்டுப் பிரசுரம் காணப்பட்டது.
வீடுகளில் நகைக்கொள்கைகளில் ஈடுபட்டது, சண்டிலிப்பாய் இளம் பெண் ஒருவரை சுழிபுரத்தில் வைத்து பலாத்காரம் செய்தமை.
இயக்கத்தின் பெயரில் வாகனக் கடத்தல்களில் ஈடுபட்டமை போன்ற குற்றச் சாட்டுகள் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
பிரசுரத்தின் அடியில் தீாப்பு வழங்கியது யார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தீாப்பு வழங்கியது “சங்கிலியன் பஞ்சாயத்து” என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.
சங்கிலியன் பஞ்சாயத்து என்ற பெயரில் தண்டணை வழங்கியது புளெட் இயக்கம்.
யாழ்பாணத்தை கடைசியாக ஆண்ட மன்னனின் பெயர்தான் சங்கிலியன்.
கிளிநொச்சியில் கந்தசாமி சிறிஸ்கந்தராசா (வயது 23) என்பவரும் சமூகவிரோதி என்று குற்றம்சாட்டப்பட்டு “புளொட்” அமைப்பால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மின் கம்பத்தில்
அச்சுவேலி பஸ்நிலையத்துக்கு சென்றவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்த மின்கம்பத்தில் ஒரு உடல் கட்டப்பட்டிருந்தது.
முகத்தில் சூட்டுக்காயம். கழுத்தில் வெட்டுக்காயம். கொலையானவர் இளைஞராக தெரிந்தார்.
மின் கம்பத்தின் அருகே ஒரு துண்டுப் பிரசுரம் காணப்பட்டது.
துப்பாக்கி முனையில் பொதுமக்களின் உடமைகளை கொள்ளையடித்தான். அதுக்காகவே தண்டனை என்று பிரசுரத்தில் கூறப்பட்டிருந்தது.
பிரசுரத்தில் புலிகள் தமது சின்னத்தையும் பொறித்திருந்தனர். கொல்லப்பட்டவரின் பெயர் பொன்னம்பலம் நடராஐா. வயது 28.
இத் தண்டணையை அடுத்து மின் கம்பத் தண்டனைகள் பரபரப்பாகப் பேசப்பட்டன.
திருடர்கள், கொள்ளையர்கள் பற்றி மக்கள் தமக்குள் பேசிக்கொள்ளும் போது மக்கள் இவ்வாறு கூறுவார்கள்.
“போஸ்ரிலை (மின்கம்பத்தில்) தொங்கப்போகிறான்.
குக்கூ
யாழ்பாணம் கல்வியங்காட்டைச் சேர்ந்தவர் குணரத்தினம் 29வயது. இவரும் சண்டியர். சுருக்கமாக “குக்கூ” என்று அழைக்கப்படுவார்.
“குக்கூ” வுக்கு மூன்று பெண்டாட்டி. அதுவும் போதாது என்று அங்கே இங்கே கைநீட்டி அட்டகாசம் வேறு.
என்றாலும் “குக்கூ” கெட்டிக்காரன். 83 யூலைக் கலவரத்தின் போது வெலிக்கடைச் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டார்கள் அல்லவா?
அப்போது யாழ்பாணம் சிறைச் சாலையில் இருந்த தமிழ் கைதிகளும் பயம்.
தாமும் கொல்லப்படலாம் என்று நினைத்தார்கள்.
“குக்கூ” வும் எதோ திருட்டுக் குற்றத்துக்காக யாழ்பாணச் சிறையில் இருந்தான். அநியாயமாக சாவான் ஏன் என்று சிறையிலிருந்து தப்பி ஓடிவந்துவிட்டான்.
வெளியே வந்தவன் ஆங்காங்கே கைவரிசை காட்டினான்.
நவாலியில் ஒரு வீட்டில் புகுந்து அங்கிருந்த இளம்பெண்ணை தாக்கினார்.
ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளோடு கம்பி நீட்டினான்.
ஒரு நாள் “குக்கூ” வை வழிமறித்தனர் சில இளைஞர்கள். “குக்கூ” முதலில் முறைத்துப் பார்த்தான்.
பின்னர் என்ன நினைத்தானோ ஓடத் தொடங்கினான். இளைஞர்களில் ஒருவர் சுட்டார்.
“குக்கூ” விழுந்தான். மல்லாகத்தில் ஒரு மின்கம்பத்தில் “குக்கூ” வின் உடலைக் கட்டிவிட்டுப் போய்விட்டார்கள்.
” பல தடவை எச்சரித்தோம். கேட்கவில்லை. அதனால் சுட்டுவிட்டோம்” என்று சுன்னாகம், மல்லாகப் பகுதிகளில் சுவரொட்டிகள் காணப்பட்டன.
புலிகள் தான் “குக்கூ”வைச் சுட்டனர். “குக்கூ” சிறையில் இருந்திருந்தால் செத்திருக்க மாட்டான்.
ஐப்பானுக்கு குறி
இதுபோல மற்றொரு சம்பவம். முல்லைத்தீவுச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரை மகேந்திரன் என்று சொன்னால் தெரியாது. ஜப்பான் என்று சொன்னால் தான் தெரியும்.
தனியார் வீடகளுக்குள் புகுந்து கைவரிசை காட்டுவதில் ஜப்பான் படுசூரன். அடி,பிடி விவகாரங்கங்களிலும் கெட்டிக்காரன்.
ஜப்பானை தேடிவந்தனர் மூன்று இளைஞர்கள். ஜப்பானுக்கு விஷயம் விளங்கிவிட்டது. வந்தவர்களையும் ஓரளவு அவனுக்கு தெரியும்.
ஓடித்தப்ப வழி பார்த்தான். சூடு விழுந்தது. தலையில் ஒரு சூடு. மார்பில் ஒரு சூடு. ஜப்பான் செத்துப் போனான்.
இதற்கு அன்புடன் படைப்பிரிவு உரிமை கோரியது. இது புளொட் அமைப்பின் ஒரு பிரிவாகும்.
பிரபலமான மற்றொரு சண்டியருக்கு புலிகள் குறிவைத்தனர். குறிவைக்கப்பட்டவரும் லேசுப்பட்டவரல்ல.
(தொடர்ந்து வரும்..)
அரசியல் தொடர்..எழுதுவது அற்புதன்.
வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்
28.06.95 அதிகாலை மண்டைதீவு இராணுவ முகாமை புலிகள் தாக்கி அங்கிருந்த ஆயுதங்களை கைப்பற்றினார்கள்.
முகாம் தாக்குதல் காட்சியே மேலுள்ள படங்கள். கைப்பற்றப்பட்ட ஆயதங்களை புலிகளது தலைவர் பிரபாகரன், கடற்புலித் தளபதி சூசை, புலிகளது மூத்த தளபதி சொர்ணம், யாழ் தளபதி பானு ஆகியோர் பார்வையிட்டனர்.
28.07.95 இல் வெலிஓயா தாக்குதல் புலிகளிடம் கைப்பற்றிய ஆயுதங்களை புலிகளது பாணியிலேயே பார்வைக்கு வைக்க இராணுவத்தினருக்கு ஒரு வாய்ப்பு. இராணுவ வெற்றிகளை பறைசாற்றுவதில் இரு தரப்பும் ஏட்டிக்கு போட்டியாக செயற்பட்டுகின்றன.
ஆயுத பலத்துக்கே முதல் மரியாதை.
எம்.ஜி.ஆரை குளிர்விக்க பிரபாகரன் சொன்ன கதை: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை 39
கண்ணி வெடியில் சிக்கிய யாழதேவி!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 38