புலி­க­ளுக்கு பணம் கொடுத்­தது நிரூ­பிக்­கப்­பட்ட பின்னர் மஹிந்த ராஜபக் ஷவின் பிர­தமர் கனவு மட்­டு­மல்ல, அவ­ரது குடி­யு ­ரி­மையும் பறி­போகும் என அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் இன்று மஹிந்த ராஜபக் ஷவின் காற்று தடைப்­பட்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் காற்று வீச ஆரம்­பித்­துள்­ளது என்றும் அமைச்சர் தெரி­வித்தார்.

கொழும்பில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மகா­நாட்டில் உரை­யாற்றும் போதே அமைச்சர் ராஜித சேனா­ரத்ன இவ்­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் மஹிந்த ராஜபக் ஷவின் காற்று வீசு­வ­தாக கூறி கடந்த காலங்­களில் அவர் பெயர் அர­சி­யலில் வியா­பாரம் செய்­யப்­பட்­டது.

ஆனால் இன்று மஹிந்த காற்று செய­லி­ழந்து விட்­ட­தோடு அந்தப் பெயரை வியா­பாரம் செய்ய முடி­யாத வங்­கு­ரோத்து நிலை­மைக்கு முன்­னணி தள்­ளப்­பட்­டுள்­ளது.

இதனால் இன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் புகைப்­படம் போடப்­பட்டு விளம்­ப­ரங்கள் பிரசுரிக்கப்படு­கின்­றன.

மைத்­திரி யுகம் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­மென பிர­சாரம் செய்­கின்­றனர். மைத்­திரி புகழ்­பாட ஆரம்­பித்­துள்­ளனர்.

போதைப்­பொருள், எதனோல் வியா­பா­ரிகள் ஊழல் மோச­டிக்­கார கும்­பல்­களால் எவ்­வாறு மைத்­திரி யுகத்தை ஏற்­ப­டுத்த முடியும்? ஜன­வரி 8ஆம் திகதி ஏற்­ப­டுத்­தப்­பட்ட புரட்சி தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­படும்.

இறு­தி­யாக இடம்­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்­திலும் ஜனா­தி­பதி மைத்­திரி நாம் வெற்­றி­பெற தமது வாழ்த்துக்களை தெரி­வித்தார்.

தாஜுதீன் கொலை வழக்கு விசா­ரணை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. முன்னாள் ஜனா­தி­ப­தியின் பாது­காப்பு பிரிவில் இருந்த மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

அவர்கள் வாக்கு மூலம் வழங்­கி­யுள்­ளனர். தாஜு­தீனை ஏன் இவர்கள் கொலை செய்ய வேண்டும். இவர் கடத்­தப்­பட்ட வேனும் ஷிராந்தி ராஜபக் ஷவிற்கு சொந்­த­மா­னது.

எக்­னெ­லி­கொ­ட காணாமல் போனது தொடர்பில் புலிகள் இயக்­கத்தின் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட உறுப்­பினர் ஒருவரும், இரா­ணு­வத்தில் ஒரு­வரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

கடந்த காலங்­களில் இடம்­பெற்ற கொலை­க­ளுக்கு புலிப்­பெ­யரே பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

அனைத்தும் புலிகள் கணக்­கி­லேயே சேர்க்­கப்­பட்­டது. பாது­காப்புத் துறையை சார்ந்­தவர் தொடர்பில் கார்ட்டூன் வரைந்­ததால் தான் எக்­னெ­லி­கொட கடத்­தப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.

இன்று எம்மை கொலை செய்­வ­தற்கும் முன்னாள் புலி உறுப்­பினர் மற்றும் இரா­ணு­வத்­தினர் அமர்த்­தப்பட்டுள்ளனர். எமக்கு மரண அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

பாதாள உலக கோஷ்­டி­க­ளு­டனும், புலி­க­ளு­டனும், இரா­ணு­வத்தில் சில­ரு­டனும் தொடர்­பு­களை வைத்­துள்­ளனர்.

அடிப்­ப­டை­வாத ஒரு பிக்கு குழுவும் இதில் உள்­ள­டங்­கி­யுள்­ளது. ஊழல் மோச­டிகள் குற்­றங்­களை மறைத்து தப்­பிக்­கவே மஹிந்த அர­சி­ய­லுக்குள் வந்­துள்ளார்.

புலி­க­ளுக்கு பணம் வழங்­கி­யது தொடர்­பாக விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டு­வ­ரு­கின்­றன. இது நிரூ­பிக்­கப்­பட்ட பின்னர் மஹிந்­தவின் பிர­தமர் கனவு மட்­டு­மல்ல, அவ­ரது குடி­யு­ரி­மையும் பறி­போகும்.

எதிர்­வரும் 18 ஆம் திக­திக்கு பிறகு மஹிந்­தவின் பல கதைகள் வெளி­வரும்.

எதிர்­வரும் 17ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு ஆட்­சியை வழங்க மக்கள் தீர்­மா­னித்து விட்­டனர் என்றும் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க

இன­வா­தத்­தையும், மத­வா­தத்­தையும் தூண்டி கீழ்த்­த­ர­மான அர­சி­யலை மஹிந்த ராஜபக் ஷ மேற்­கொள்­கின்றார். இதனை தோல்வியடையச் செய்ய வேண்டும். புதிய அரசியல் கலாசாரத்தை ஐ.தே.முன்னணி ஆட்சியில் முன்னெடுக்கப்படும்.

மஹிந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ளவரை ஊழல் மோசடிக்காரர்கள் வெளியேற மாட்டார்கள். பத்து வருடங்கள் ஆட்சியிலிருந்த மஹிந்த உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை. இன்று பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றார் என்றார்.

Share.
Leave A Reply