சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலர் பதவியில் இருந்து அனுர பிரியதர்சன யாப்பாவையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜெயந்தவையும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிரடியாக நீக்கியுள்ளார்.

இந்த இரண்டு கட்சிகளின் தலைவர் என்ற வகையில், மைத்திரிபால சிறிசேன இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலராக துமிந்த திசநாயக்கவையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பதில் பொதுச்செயலராக பேராசிரியர் விஸ்வ வர்ணபாலவையும், அவர் நியமித்துள்ளார்.

dumintha-dissanayake

dumintha-dissanayake.

அத்துடன், இவ்விருவரின் கடமைகளுக்கு எவ்விதமான இடையூறுகளும் ஏற்படாத வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இடைக்கால தடையுத்தரவும் பெற்றுகொள்ளப்பட்டுள்ளது.

இவ்விருவரையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவருமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே நியமித்துள்ளார்.

Share.
Leave A Reply