பிரகீத் எக்­னெ­லி­கொட காணாமல் போன ஒரு ஊட­க­வி­ய­லாளர். ராஜ­கி­ரிய பகு­தியில் வைத்து கடந்த 2010 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 24 ஆம் திகதி கடத்­தப்­பட்ட எக்­னெ­லி­கொ­ட­வுக்கு என்ன நடந்­தது என இன்னும் தெரியவில்லை.

கடத்­தப்­பட்டு காணாமல் போன ஊட­க­வி­ய­லா­ளர்கள் பட்­டி­யலில் நீடிக்கும் எக்­னெ­லி­கொட தொடர்பில் 2010 முதல் விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரும் போதும் இது வரை அவ­ருக்கு என்ன நடந்­தது என எதுவும் அறி­விக்­கப்­படவில்லை.

எனினும் கடந்த 5 வரு­டங்­க­ளாக இது தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் விசா­ர­ணை­களில் தற்­போது திருப்பம் ஏற்­பட்­டுள்­ளது.

பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் உத்­த­ர­வுக்கு அமைய குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன மற்றும் அதன் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சுதத் நாக­ஹ­வத்த ஆகி­யோரின் நேரடி கட்­டுப்­பாட்டில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஒரு­வரின் கீழ் இந்த விசாரணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

தற்­போது வரையில் பொலி­ஸாரால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள விசா­ர­ணை­களில் இர­ணுவ புல­னாய்­வாளர்கள் என அடை­யாளம் காணப்­பட்­டுள்ள இரு­வரால் இரா­ஜ­கி­ரி­யவில் வைத்து எக்­னெ­லி­கொட கடத்திச் செல்லப்பட்டுள்­ளதும் பின்னர் கிரித்­தல இரா­ணுவ முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­ததும் தெரி­ய­வந்­துள்­ளது.

பிரகீத் எக்­னெ­லி­கொட ஏன் கடத்­தப்­பட்டார்?, யாரால் கடத்­தப்­பட்டார்? போன்ற கேள்­வி­க­ளுக்கு இந்த விசாரணை­களில் கிட்­டத்­தட்ட பதில் கிடைத்­துள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உள்­ளக தக­வல்கள், அவர் தற்­போது எங்கு உள்ளார்?, உயி­ருடன் உள்­ளாரா அல்­லது கொலை செய்­யப்­பட்டு விட்­டாரா போன்ற கேள்­வி­க­ளுக்கு உறு­தி­யான பதில் கிடைக்கும் என நம்­பு­கின்­றனர்.

உண்­மையில் இது தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரும் புல­னாய்வுப் பிரி­வினர் கடந்த வாரம் இரு தமிழ் இளை­ஞர்­களைக் கைது செய்­தனர்.

அவர்கள் இரா­ணு­வத்தின் புல­னாய்வுப் பிரிவில் கட­மை­யாற்­றி­ய­வர்கள். விடு­தலைப் புலிகள் அமைப்பில் இருந்து விடு­பட்டு புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்­ட­வர்கள்.

அவர்­களை நாம் ரமேஷ், மகேஷ் என்ற மாற்று பெயர்­களில் அடை­யா­ளப்­ப­டுத்­து­கின்றோம். எக்­னெ­லி­கொட தொடர்­பான விசா­ர­ணைகள் தற்­போது இடம்­பெற்று வரும் நிலையில் விசா­ர­ணை­களை பாதி­க்காத வண்ணம் மேலும் சில தக­வல்­க­ளையும் உங்­க­ளுடன் பகிர்ந்­து­கொள்­ளலாம்.

அதன்­படி, 2010 ஜன­வரி 24 ஆம் திக­தி­யன்று ராஜ­கி­ரிய பகு­தியில் வைத்து பிரகீத் எக்­னெ­லி­கொ­டவை ரமேஷும் மகேஷும் சேர்ந்தே கடத்­தி­யுள்­ளனர்.

இவ்­வாறு தாம் கடத்திய எக்­னெ­லி­கொ­டவை அவர்கள் வட மத்­திய மாகா­ணத்தின் சிறப்பு இராணுவ முகாம்களில் ஒன்­றான கிரி­தல முகா­முக்கு கொண்டு சென்­றுள்­ளனர்.

இந்த காலப்­ப­கு­தியில் கிரி­தல இரா­ணுவ முகாமில் சுமார் 20 இரா­ணுவ புல­னாய்­வா­ளர்கள் சேவையில் இருந்துள்­ளனர்.

அவர்­களில் இரு­வ­ரான ரமேஷும் மகே­ஷுமே இந்த கடத்­தலை செய்­துள்­ளமை புல­னாய்வுப் பிரி­வி­னரின் அறி­வியல் தட­யங்­களை மையப்­ப­டுத்­திய விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு கடத்­தலை செய்­த­தாக நம்­பப்­படும் இரு புல­னாய்­வா­ளர்­களும் தனியார் தொலை­பேசி சேவை நிறுவனம் ஒன்றின் ஊடாக பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட தொலை­பேசி இலக்­கங்­களை பயன்­ப­டுத்­தி­யுள்ள­துடன் அவர்கள் பயன்­ப­டுத்­தி­யுள்ள தொலை­பே­சியின் எமி இலக்­க­மா­னது பதிவு செய்­யப்­ப­டா­தது என தெரி­ய­வந்­துள்­ளது.

வெள்ளை வேன் கடத்­தல்கள் பல தொடர்பில் இவ்­வா­றான எமி இலக்கம் பதி­வா­காத தொலை­பே­சிகள் பயன்படுத்­தப்­பட்­டுள்­ளமை தொடர்­பிலும் அதி­கா­ரிகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

உண்மையில் பிரகீத் எக்­னெ­லி­கொட காணாமல் போனமை தொடர்பில் முதல் முறைப்­பாடு ஹோமா­கமை பொலி­ஸா­ருக்கே கிடைத்­தி­ருந்­தது.

எக்­னெ­லி­கொ­டவின் மனைவி இந்த முறைப்­பாட்­டினை செய்­தி­ருந்தார். இந் நிலையில் இது தொடர்பில் தற்போது விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசேட பொலிஸ் குழு, ஹோமாகமை பொலிஸ் நிலை­யத்தின் தகவல் புத்­த­கத்­தையும் முறைப்­பாட்டு புத்­த­கத்­தையும் முதலில் பரி­சோ­தித்­துள்­ளது.

இதன் போது எக்­னெ­லி­கொட தொடர்­பான முறைப்­பாடு மற்றும் முறைப்­பாட்டில் குறிப்­பி­டப்­பட்ட இரு தொலைபேசி இலக்­கங்கள் தொடர்­பி­லான தக­வல்கள் உள்­ளிட்ட தாள்கள் கிழிக்­கப்­பட்டு பின்னர் மீண்டும் ஒட்டப்­பட்­டுள்­ளமை தொடர்பில் புல­னாய்வுப் பிரி­வினர் தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

இரு தாள்கள் இவ்­வாறு கிழித்­தெ­டுக்கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் அவ­தா­னிக்­க­ப்பட்­டுள்­ளது.

இத­னி­டையே தான் 2010 ஜனா­தி­பதி தேர்­தலில் அப்­போது பொது வேட்­பா­ள­ராக இருந்­த­வ­ருக்கு பிரகீத் எக்­னெ­லி­கொட ஆத­ர­வ­ளித்தார் என்ற ரீதியில் காலியை சேர்ந்த கவி வரி­களை எழுதும் ஒரு கலை­ஞ­ருடன் முரண்­பா­டுகள் ஏற்­பட்­டுள்­ளன.

இதனைத் இதன் போது எக்­னெ­லி­கொ­டவை குறித்த கலைஞர் அச்­சு­றுத்தும் பாணியில் திட்­டி­யுள்ளார். இதனைத் தொடர்ந்து சில நாட்­க­ளி­லேயே எக்­னெ­லி­கொட மாய­மானார்.

இந் நிலையில் குறித்த கலைஞர் தற்­போது தலை­ம­றைவு வாழ்க்கை ஒன்­றினை வாழ்­வ­தாக கூறும் பொலிஸார் அவ­ருடன் கடத்­த­லுக்கு வந்த ரமேஷும் மகேஷும் கொண்­டி­ருந்த தொடர்பு குறித்து விரி­வான விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

ரமேஷும் மஹேஷும் சேர்ந்து எக்­னெ­லி­கொ­டவை கடத்திக் கொண்டு நேராக கிரித்­தல முகா­முக்கு சென்றுள்ளனர்.

இது தொடர்பில் அப்­போதே 077 037XXXX என்ற இலக்­கத்தை மையப்­ப­டுத்தி மிரி­ஹான பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கி­யுள்ள போதும் அது தொடர்பில் உரிய நடவ டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை என தெரி­ய­வந்­துள்­ளது.

ரமேஷ், மஹேஷ் ஆகியோர் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு வழங்­கி­யுள்ள வாக்கு மூலங்­களின் பிர­காரம், எக்­னெலி கொட கிரித்­தல முகாமில் வைத்து தமது மேல­தி­காரி ஒரு­வ­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளமை உறு­தி­யா­கி­யுள்­ளது.

எவ்­வா­றா­யினும் கிரித்­தல முகாமில் ஒப்­ப­டைக்­கப்­பட்ட எக்­னெ­லி­கொ­ட­வுக்கு என்ன நடந்­தது என்­பதே தற்போது கேள்விக் குறி­யாக உள்­ளது.

குறிப்­பாக புல­னாய்வுப் பிரி­வுக்கு கிடைத்­துள்ள தகவல் ஒன்றின் படி, எக்­னெ­லி­கொட கொலை செய்­யப்­பட்டு கிழக்குக் கடலில் மூழ்­க­டிக்­கப்­பட்­டு­விட்­ட­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

எனினும் அந்த தகவல் எந்­த­ளவு தூரம் நம்­ப­க­ர­மா­னது என புல­னாய்வுப் பிரி­வினர் ஆராய்­கின்­றனர். எனவே எக்னெ­லி­கொட கொலை செய்­யப்­பட்­டு­விட்­டதை தற்­போ­தைக்கு உறு­தி­யாக கூற முடி­யாமல் உள்­ளது.

இந் நிலையில் தான் ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொ­டவின் கடத்தல் தொடர்பில் பிர­தான நப­ராக கருதப்படும் இரா­ணு­வத்­தி­லி­ருந்து தற்­போது ஓய்­வு­பெற்ற சார்ஜன்ட் மேஜர் ரண் பண்டா என அறி­யப்­படும் நபர் கைதா­கி­யுள்ளார்.

குரு­ணா­க­லுக்கு சென்ற விசேட பொலிஸ் குழு அவரை சில தினங்­க­ளுக்கு முன்னர் கைதுசெய்து தடுத்து வைத்து விசா­ரித்து வரு­கின்­றது.

இதன் போது எக்­னெ­லி­கொட விவ­காரம் தொடர்பில் பல தக­வல்­களை குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் வெளிப்­ப­டுத்த முடிந்­துள்­ளது.

பொலிஸ் தலைமை­ய­கத்தின் உள்­ளக தக­வல்­களின் பிர­காரம், ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட கிரித்­தல முகா­முக்கு கடத்திச் செல்­லப்­பட்ட பின்னர் அந்த முகாமில் மட்டும் 3 நாட்கள் தடுத்து வைக்­கப்­பட்­ட­தாக குறித்த இரா­ணுவ சார்ஜன்ட் மேஜர் வாக்­கு­மூ­லத்தில் குறிப்­பிட்­டுள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது.

இதனை விட தடுத்து வைக்­கப்­பட்ட குறித்த மூன்று நாட்­களில் அவர் எழு­தி­ய­தாக கூறப்­படும் புத்­தகம் தொடர்பில் விசா­ரணை செய்­யப்­பட்­ட­தா­கவும் அந்த இரா­ணுவ அதி­காரி விச­ர­ணை­யா­ளர்­க­ளிடம் தெரி­வித்­துள்ளார்.

ரமேஷ், மஹேஷ் ஆகியோர் கடத்தி வந்த எக்­னெ­லி­கொ­டவை இவ்­வாறு தானே தடுப்பில் வைத்து விசா­ரணை செய்­த­தாக அந்த இரா­ணுவ சார்ஜன்ட் ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

 Sandya Eknaligoda wife of disappeared journalist Prageeth Eknaligoda with with their two sons Sathyajith Sanjaya and Harith Danajaya, Sri Lanka, 10 January 2011 Prageeth Eknaligoda is a journalist who disappeared in January 2010 just before the Sri Lanka presidential election. He was known to be a government critic, and was also involved in the election campaign of the opposition candidate.Prageeth-Eknaligoda-family

2010 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலின் பொது வேட்­பா­ள­ருக்கும் எக்­னெ­லி­கொ­ட­வுக்கும் இடை­யி­லான தொடர்­புகள் மற்றும் குடும்ப விருட்­சகம் என்ற பெயரில் பதிப்­புக்கு தயா­ராக இருந்த எக்­னெ­லி­கொ­டவின் புத்­தகம் ஆகி­யவை தொடர்­பி­லேயே இந்த மூன்று நாட்­களும் தொடர்ச்­சி­யாக விசா­ர­ணைகள் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸ் தக­வல்கள் மூலம் அறி­ய­மு­டி­கின்­றது.

இந் நிலையில் தான் விசா­ரணை செய்து வந்த எக்­னெ­லி­கொ­டவை, முகாமின் இரண்­டா­வது கட்­டளைத் தளபதியாக செய­ற்பட்ட அதி­காரி வந்து ‘ இவ­ருடன் ஒரு பயணம் செல்ல வேண்டி உள்­ளது’ எனக் கூறி அழைத்துச் சென்­ற­தா­கவும் அதன் பின்னர் பிரகீத் எக்­னெ­லி­கொட தொடர்பில் தனக்கு எந்த தக­வலும் கிடைக்­க­வில்லை எனவும் சார்ஜன்ட் மேஜர் தனது வாக்கு மூலத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

எக்­னெ­லி­கொட கடத்தல் விவ­காரம் இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் கிரிதல முகாமின் கட்­டளை தள­ப­தி­யாக இருந்­தவர் கேர்ணல் தர அதி­காரி ஒரு­வ­ராவார்.

இந் நிலையில் மேஜர் தர நிலையில் இருந்த இரண்டாம் தர நிலை கட்­டளை அதி­கா­ரியே எக்­னெ­லி­கொ­டவை அழைத்துச் சென்றுள்ளார்.

(இவர்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் இடம்­பெறும் நிலையில் இவர்­களின் பெயர்­களை வெளிப்­ப­டுத்­து­வதை தவிர்க்­கின்றோம்) இந் நிலையில் கட்­டளை தள­ப­தியின் உத்­த­ர­வுக்கு அமையவே, இரண்டாம் தர கட்­டளை அதி­காரி செயற்­பட்­டி­ருக்க வேண்டும்.

இவ்­விரு அதி­கா­ரி­களும் எக்­னெ­லி­கொட விவ­கா­ரத்தில் கண்­டிப்­பாக பொறுப்புக் கூற வேண்­டி­ய­வர்­க­ளாவர் என புல­னாய்வுப் பிரி­வினர் அடை­யாளம் கண்­டுள்­ளனர்.

இவர்­களை விசா­ரணை செய்­வது குறித்து தற்­போது புல­னாய்வுப் பிரிவு விரி­வான நடவ­டிக்­கை­களை முன்னெடுத்­துள்­ளது.

நாளை மறுதினம் நடை பெறும் பொதுத் தேர்­தலைத் தொடர்ந்து இவ்­விரு இரா­ணுவ அதி­கா­ரி­க­ளையும் புல­னாய்வுப் பிரி­வினர் விசா­ரணை செய்­வார்கள் என தெரி­கின்­றது.

prageethஊட­க­வி­ய­லாளர் எக்­னெ­லி­கொட கடத்­தப்­பட்­டமை தொடர்­பிலும் அதற்­கன கார­ணமும் கிட்­டத்­தட்ட புலனாய்வுப் பிரி­வி­னரால் உறுதி செய்­யப்­பட்­டுள்ள நிலையில், விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்­டிய இராணுவ அதி­கா­ரிகள் இரு­வ­ரையும் விசா­ரணைசெய்­வதில் புலனாய்வுப் பிரி­வினர் சிக்­கல்­களை எதிர்கொண்டுள்­ள­தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இராணுவத்தின் உயர் மட்டம் அவர்களை காக்க நினைப்பதாக கூறப்படுகின்றது. இந் நிலையில் இது தொடர்பில் வெளிப்படையான விசாரணையொன்றை முன்னெடுக்கக் கோரி எக்னெலிகொடவின் மனைவியும் பிள்ளைகளும் நேற்று முன்தினம் பொலிஸ் தலைமையகத்துக்கு கடிதம் ஒன்றினையும் சமர்ப்பித்திருந்தனர்.

இந் நிலையில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட விவகாரத்தில் பல முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு விட்டதாகவும் மிக விரைவில் அவர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த முடியும் எனவும் மர்மம் துலங்கும் எனவும் நம்புவதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.

எனவே 5 ஆண்டுகளாக மரணித்து இருந்த விசாரணைகள் தற்போது உயிர்ப்படைந்துள்ள நிலையில் விரைவாக விசாரணைகள் நடத்தப்பட்டு, ஊடகவியலாளர் பிரகீத்துக்கு என்ன நடந்தது என்பதை பொலிஸார் வெளிப்படுத்துவதுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எக்னெலிகொடவின் குடும்பத்தார் மற்றும் ஊடக நண்பர்களின் எதிர்பார்ப்பாகும்.

-எப்.எம்.பஸீர்-

தாஜூதீனின் மரணத்துக்கு யோசித்த பொறுப்பு: ஜனாதிபதி மாளிகை வாகனமே சென்றது: கடத்தப்பட்டோர் மின்னேரியா முகாமில் : மேர்வின் அம்பலம்

Share.
Leave A Reply