மட்டக்களப்பு கல்குடா தேர்தல் தொகுதியின் வாழைச்சேனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட  ஓட்டமாவடி ஹூதாப் பள்ளி புகையிரத வீதிக்கு அருகில்இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் இன்று சனிக்கிழமை நண்பகல்11.45 மணியளவில் நடைபெற்றுள்ளது.

ஓட்டமாவடி பிறைந்துரைச்சேனை பகுதியைச் சேர்ந்த முகம்மட் அமீன் (35வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் அவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில்வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில்உயிரிழந்துள்ளார்.

அவ்விடத்தில் மறைந்து நின்ற இனம் தெரியாத இளைஞர் ஒருவர்தன்னிடமிருந்த துப்பாக்கியினால் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கிதாரியை கைது செய்யும் பொருட்டு பொலிஸார் பொது மக்களின்உதவியையும் நாடியுள்ளனர்.

இச்சம்பவத்தின் பின்னணி தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார்விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரணமடைந்தவர் ஓட்டமாவடி 03ம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜமால்தீன்அமீன் (வயது – 35) மூன்று பிள்ளைகளின் தந்தை என்றும் அடையாளம்காணப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மரணமடைந்தவரின் உறவினர்கள் கருத்துத்தெரிவிக்கையில்,மரணமடைந்த அமீன் ஐக்கிய தேசிய கட்சியின்வேட்பாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியை ஆதரித்து வந்தவர் என்றும்,  இதனால் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இவரைச் சுட்டுகொண்டுள்ளரார்கள் என்றும் இதற்கு உரிய அதிகாரிகள் சட்ட நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும் என்று ஊடகங்கள் மூலம் தெரிவித்துக்கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளைமேற்கொண்டு வருகின்றளர்..

11898586_1616195508668300_2106352161731808837_n11891134_1616195532001631_4556477112312510933_n11891134_1616195532001631_4556477112312510933_n11892248_1616195602001624_3230782540908794725_n11885193_1616195622001622_8272860868041117790_n11846746_1616195758668275_1856587162149939601_n11855881_1616195818668269_2361355651351296142_n11885263_1616195885334929_7155952434377992756_n11903909_1616196002001584_4138102635596226458_n11892212_1616196052001579_711168827846924780_n11888089_1616196082001576_8586082314625408400_n11885091_1616196172001567_4851613026133366368_n11846764_1616196235334894_3119937815324004469_n11094799_1616196262001558_8814441586529391863_n


Mullah_Omar-widget_gk_news_slideshow-2அமெரிக்காவை நம்பிக் கெட்ட முல்லா ஒமார் – வெளிவராத உண்மைகள்

Share.
Leave A Reply