மெதி­ரி­கி­ரிய, கொட­பொத்த பிர­தே­சத்தில் இரண்டு விவ­சா­யிகள் வெட்­டிக்­கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஹிங்­கு­ராங்­கொட பொலிஸார் தெரி­வித்­தனர்.

தங்­க­ளது விவ­சாய நிலங்­க­ளுக்கு தண்ணீர் பெற்­றுக்­கொள்­வது தொடர்பில் ஏற்­பட்ட தக­ராறை அடுத்து விவ­சாயி ஒருவர் ஏனைய இரண்டு விவ­சா­யி­களை வாளால் வெட்­டிக்­கொலை செய்­துள்­ள­தாக ஆரம்­பக்­கட்ட விசாரணைகள் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.

இச் சம்­ப­வத்தில் ஹிங்­கு­ராங்­கொட மெதி­ரி­கி­ரிய மீகஸ்ஸ கட்­டுவெவ பகு­தியைச் சேர்ந்த ஜய­கொடி ஆராச்­சி­லாகே சாந்­த­பீரிஸ்(46 வயது) மற்றும் மெதி­ரி­கி­ரிய ஜகம்­புற பகு­தியைச் சேர்ந்த திஸா­நா­யக்க முதி­யன்­ச­லாகே சமன்­கு­மார( 30 வயது) ஆகிய இரு விவ­சா­யி­க­ளுமே வெட்டிக் கொலை செய்­யப்­பட்­ட­வர்­க­ளாவர்.

இவர்­களின் சடலம் மர­ண­வி­சா­ர­ணை­களின் பின்னர் குடும்ப உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்ப­ட­வுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இக் கொலை­யுடன் தொடர்­பு­டைய சந்­தேக நப­ரான மெதி­ரி­கி­ரிய ஜன­சி­றி­கம பகு­தியைச் சேர்ந்த அப்­பு­ஹாமி கம­லன்கே விஜே­ரத்ன என்­பவர் பொலிஸில் சர­ண­டைந்­துள்ள நிலையில் இவர் தொடர்­பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் ஹிங்குராங்கொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply