இந்தியாவின் கொல்கத்தா நகரில் கையூட்டு பெற்றார் என்ற குற்றச்சாட்டில் அதிகாரி ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை 3 இயந்திரங்களுடன் எண்ணி முடிக்க 21 மணிநேரம் எடுத்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

கட்டிடங்கள் கட்டப்படுவதற்கு அனுமதி அளிக்கும் பொறுப்பில் இருந்த உள்ளூர் கவுன்சில் அதிகாரி ஒருவரிடமிருந்தே இந்தப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்த அதிகாரி தனியாக செயல்பட்டிருக்க முடியாது எனவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

இந்திய ரூபாயில் கைப்பற்றப்பட்டுள்ள இந்தப் பணத்தின் மதிப்பு 3.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவானது என்று லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பணம் மட்டுமன்றி, அந்த அதிகாரியின் வீட்டிலிருந்து தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அவை வீட்டிலுள்ள ஆசனங்களிலுள்ள பஞ்சுக்கு கீழே, சுவர்கள், குளியல் அறைகள், குளிர்சாதனப் பெட்டிகள், படுக்கைகளின் உள்ளே என பல இடங்களில் இருந்தன என்றும் லஞ்ச ஒழிப்பு போலிசார் தெரிவித்துள்ளனர்.

20cross

களைத்துப்போன அதிகாரிகள்

கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணுவதற்கு மூன்று இயந்திரங்களை அதிகாரிகள் பயன்படுத்தியுள்ளனர்.
மேலும் தேடுதல் நடைபெறும் எனக் காவல்துறையினர் தகவல்

இந்தத் தேடுதல் மற்றும் பணம் நடவடிக்கைக்குப் பின்னர் களைத்துப்போன காவல்துறையினர், அந்த அதிகாரி பயன்படுத்திய மற்ற இடங்களிலும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக கூறுகின்றனர்.

சம்பந்தப்பட்ட அந்த அதிகாரியும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை தம்மால் ஒரே தேடுதல் வேட்டையில் கைப்பற்றப்பட்டுள்ள ஊழல் பணத்தில் இதுவே மிகவும் பெரிய தொகை எனவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான வகையில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதியளிப்பதில் ஒரு பெரிய கும்பல் செயல்படுகிறது என்று தாங்கள் சந்தேகிப்பதாகவும், அதை முறியடிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply