யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள தமிழரசு கட்சியின் தலைமைக் காரியாலயம் மீது நேற்றிரவு இரவு கைக் குண்டுத் தாக்குதலை  மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இரவு 11.30 அளவில் இடம்பெற்ற இத்தாக்குதலில் யாரும் காயமடையவில்லை எனவும், அலுவலகக் கட்டடம் சிறிது சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாக்குச்சாவடி முகவர்களுக்கான செயற்பாடுகளை கட்சி தொண்டர்கள் மேற்கொண்டு இருந்த போது அதனை குழப்பும் நோக்கில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்சித் தலைவர் மாவை சேனாதி ராஜா, ஸ்ரீகாந்தா ஆகியோர் கட்சி தொண்டர்களோடு தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டபோது இத்தாக்குதல் இடம்பெற்றது.

இத்தாக்குதலினால் எவருக்கும் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இத்தாகுதலின் பின்னணியில்.. தமிழ்த்தேசியக்  கூட்டமைப்பினரே  திட்டமிட்டு   இந்தத் தாக்குதல்ளை நடாத்தியுள்ளதாக  யாழ்.செய்திகள்  தெரிவிக்கின்றன..

mavai_blast_02நேற்று இரவு மாட்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகம் மீது நடாத்தப்பட்ட திட்டமிட்ட குண்டு த்தாக்குதலின் பின்னணி வெளியாகியுள்ளது.

முற்று முழுதாக திட்டமிட்டு  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரே இந்தத் தாக்குதல்ளை நடாத்தியுள்ளனர்.

குருநகர் தண்ணீர்த் தாங்கிப் பகுதியில் உள்ள ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட டைனமற் வெடி மருந்ததைப் பயன்படுத்தியே இத் தாக்குதலை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிறிகாந்தாவின் ஆதரவாளரான நிசாந்தன் என்பவரின் வழிகாட்டலில் நடாத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

குருநகர் தண்ணீர்த்தாங்கிப் பகுதியைச் சேர்ந்த டைனமற் பாவித்து மீன் பிடித்து நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவரான டேவிட் ஜேம்சன் என்பவர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளரும் சட்டத்தரணியுமான சிறீக்காந்தாவால் பிணையில் எடுக்கப்பட்டிருந்தான்.

அவனைப் பாவித்து டைனமற் வெடி மருந்தைப் பெற்றே அவனது துணையுடன் கூட்டமைப்பினர் தமக்கு அனுதாபம் பெறுவதற்காக இத் தாக்குதலை நடாத்தியுள்ளனர்.

இதற்காக குறித்த டேவிட்ஜேம்சனுக்க 50 ஆயிரம் ரூபா கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்துள்ளதால் பீதியடைந்துள்ள கூட்டமைப்பினரும் தமிழரசுக் கட்சியினரும் தமக்கான அனுதாப வாக்குகளைப் பெறுவதற்காக இவ்வாறான தில்லாலங்கடி வேலையைச் செய்துள்ளனர்  என யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

வழமையாக அதிகாலையிலேயே வரும் உதயன் பத்திரிகை இன்னும் வரவில்லை. எல்லாம் திட்டமிட்டது போல் செய்திகளை வெளியிடச் செய்து வருவதற்கான ஆயத்தமே இது.

உண்மையில் தாக்குதல்களை நடாத்துபவர்கள் வெறுமனவே வீதியில் குண்டைப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்து அனுதாப அலையை உருவாக்க மாட்டார்கள் என்பது அனைவருக்கம் தெரிந்த விடயம்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்கள், தேர்தலில் பின்னர் இவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்பதை அறிந்து சரியான முறையில் பாடம் புகட்டுவதற்கான ஆயத்தங்கள் தமிழ்த்தேசியத்தில் பற்றுக் கொண்ட இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

Share.
Leave A Reply