இலங்கையில் திங்கட்கிழமை நடக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு கோடியே 50 லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

நாடெங்கிலும் 12ஆயிரத்து 314 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடக்கின்றது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பாக இந்தத் தேர்தலில் 6 ஆயிரத்து 124 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

election-2225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்திற்கு 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் 196 உறுப்பினர்கள் நேரடியாக தெரிவு செய்யப்படுகின்றார்கள். 29 பேர் தேசியப் பட்டியல் மூலம் தெரிவாகிறார்கள்.

ஆகக் கூடுதலாக 16 அரசியல் கட்சிகளும் 30 சுயேச்சைக் குழுக்களும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே போட்டியிடுவதால் அம்மாவட்டத்திற்கான வாக்குச் சீட்டின் நீளம் இரண்டரை அடி என்று கூறப்படுகின்றது.

கொழும்பு மாவட்டத்திலிருந்து ஆகக் கூடுதலான உறுப்பினர்களாக 19 பேர் தெரிவாகும் அதேவேளை, ஆகக்குறைந்த உறுப்பினர்களாக 4 பேர் திருகோணமலை மாவட்டத்திலிருந்து தெரிவாகின்றார்கள்.

தேர்தல் செயலகத்தின் தகவல்களின் 1 இலட்சத்து 95 ஆயிரம் அரச பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

75 ஆயிரம் பொலிஸார் தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியம் , காமன்வெல்த் நாடுகள் அமைப்பு , தெற்காசிய தேர்தல் மேற்பார்வை ஒன்றியம் உட்பட சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே இந்த பணிக்காக வருகை தந்துள்ளார்கள்.

கஃபே, பெஃப்ரல் உள்ளிட்ட உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் ஏற்கனவே இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

 

114958_1

யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களில் இம்முறை தேர்தலில் 7 லட்சத்து 82 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 870 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு நடக்கவுள்ளது.

Share.
Leave A Reply