அத்துமீறி பிரித்தானியாவுக்குள் நுழையும் அகதிகளை இனி அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக கேமரூன் தெரிவித்துள்ளார்.
அகதிகள் பிரித்தானியாவுக்குள் நுழைவதின் முக்கிய நோக்கமே பொருளாதார காரணங்களாகத்தான் இருக்க முடியும் எனவும் கேமரூன் தெரிவித்தார்.
ஆனாலும், ஐரோப்பாவிலேயே பிரித்தானியாதான் அகதிகள் மீது மிகவும் தாராளமாக நடந்துகொள்ளும் நாடுகளில் முதன்மையானதாக உள்ளது எனவும் கேமரூன் குறிப்பிட்டார்.
மேலும் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் அகதிகளை கண்காணிக்கும் பொருட்டு நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாகவே உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பெருமளவு மக்கள் அகதிகளாக ஐரோப்பா நோக்கி வருவதாக குறிப்பிட்ட கேமரூன், மத்திய தரைக்கடலில் அவர்கள் ஆபத்தில் சிக்கவும் நேரிடுகிறது.
எனவே, இதுபோன்ற சூழ்நிலைகளில் பிரித்தானியா சீரிய நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை மீட்கவும் செய்திருப்பதாக கேமரூன் தெளிவுபடுத்தியுள்ளார்.
சமீபத்தில் அகதிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக வந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்த கேமரூன் அதுபோன்று ஒருபோதும் தாம் பேசியதில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.