சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் இருந்து நீக்கப்பட்ட 13 பேரினது விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இன்று மாலை வாக்களிப்பு முடிந்த கையுடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களான இரு முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்ட 13 பேரை மைத்திரிபால சிறிசேன நீக்கியுள்ளார்.

இவர்களுக்குப் பதிலாக, சந்திரிகா குமாரதுங்க, பேராசிரியர் விஸ்வ வர்ணபால உள்ளிட்ட 13 பேர், புதிய மத்திய குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திரக் கட்சி மத்திய குழுவில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விபரம்-

•சுசில் பிரேமஜெயந்த
•அனுர பிரியதர்சன யாப்பா
•டி.எம்.ஜெயரட்ன
•ரட்ணசிறி விக்கிரமநாயக்க
•ஜனக பண்டார தென்னக்கோன்
•பவித்ரா வன்னியாராச்சி
•ஜோன் செனிவிரத்ன
•நிர்மலா கொத்தலாவல
•டிலான் பெரேரா
•ரோகித அபேகுணவர்த்தன
•டலஸ் அழகப்பெரும
•பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்
•கமலா ரணதுங்க

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் 25 பேர், அக்குழுவிலிலுருந்து வெளியேற்றப்பட்டு, அந்த பதவிகளுக்கு புதிதாக 25 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்தக்கட்சியின் தலைவரும் இலங்கை ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேனவின் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

150116111634_slfp_maithri_640x360_bbcஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் என்கிற முறையில் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மைத்ரிபால சிறிசேன இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிவிப்பின்படி பதவிகளில் இருந்து நீக்கப்பட்டவர்களில், நாட்டின் முன்னாள் பிரதமரும் தி மு ஜயரட்ண, மூத்த அமைச்சராக இருந்த ஜானக்க பண்டார தென்னக்கோன் போன்றோரும், ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்த சுஷீல் பிரேமஜயந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அனுர பிரயதர்ஷன யாப்பா ஆகியோரும் அடங்குவதாக தெரிகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவருக்கும் இந்நாள் தலைவருக்கும் இடையிலான மோதல் மோசமடைகிறது

150621163243_maithri_mahinda_512x288_bbcஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் தற்போதைய தலைவரும் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேனவுக்கும்,

முன்னாள் தலைவரும் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நடந்துவரும் அதிகாரப் போட்டியின் மற்றும் ஒரு காய்நகர்த்தலாகவே மைத்ரியின் இந்த செயல் பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply