செய்திகள் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 33,834 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார்.
அதேவேளை, ஐதேக சார்பில் எம். மஹ்ரூப் 35,456, விருப்பு வாக்குகளைப் பெற்றும், இம்ரான் மஹ்ரூப் 32, 582 விருப்பு வாக்குகளைப் பெற்றும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் சுசந்த புஞ்சிநிலமே 19,953 விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார்.