இது­வரை பொரு­ளா­தாரத் தடையால் மேற்­கா­சியப் பிர­தே­சத்தில் சற்று அடக்கி வாசித்துக் கொண்­டி­ருந்த ஈரான், இனிமேல் ஸ்தாயில் வாசிக்­குமா என்ற கேள்வி உலக அரங்கில் ஒலித்துக் கொண்­டி­ருக்­கின்­றது.

ஈரானின் உச்சத் தலைவர் அயத்­துல்லா அலி கொமெய்னி அமெ­ரிக்­கா­வுடன் யூரே­னியப் பதப்­ப­டுத்தல் தொடர்பான உடன்­ப­டிக்­கையின் பின்னர் அமெ­ரிக்கா தொடர்­பான ஈரானின் நிலைப்­பாட்டில் மாற்­ற­மில்லை என்றார்.

ஈராக்கில் சதாம் ஹுசெய்னின் ஆட்­சியை ஒழித்­ததன் மூலம் அமெ­ரிக்கா ஈரானை வலு­வ­டையச் செய்து விட்டது என்­பது ஸுன்னி முஸ்­லிம்­களின் குற்­றச்­சாட்­டாக இருக்­கின்­றது.

வர­லாற்றில் ஒரு வல்­ல­ரசு

Iran's Nuclear Ambitions: Options for the West

ஈரா­னுக்கு என்று உய­ரிய வர­லாற்றுப் பெருமை இருக்­கின்­றது. பார­சீகம் (Persia) என அதை ரோமர்கள் அழைத்தனர்.

எகிப்து முதல் துருக்கி, மெசப்­பட்­டோ­மியா ஆகி­யவை உள்­ளிட்ட அத­னது பேர­ரசு சிந்து நதி­வரை வியா­பித்திருந்­தது.

பின்பு அவர்கள் கிரேக்கர், ரோமர், அர­புக்கள், துருக்­கியர், மங்­கோ­லியர் ஆகி­யோரால் ஆக்­கிர­மிக்­கப்­பட்­டனர். மீண்டும் எகிப்து, அல்­ஜீ­ரியா, லிபியா, ஈராக், சவூதி அரே­பி­யாவின் ஒரு பகுதி ஆகி­ய­வற்றைக் கொண்ட ஒரு வல்­ல­ர­சாக தாம் உரு­வாக வேண்டும் என தற்­போ­தைய ஈரானின் மத­வாத ஆட்­சி­யா­ளர்கள் கரு­து­கின்­றனர்.

இப்­பி­ர ­தே­சங்­களைத் தமது ஆட்­சிக்குள் கொண்டு வந்து அங்கு ஷியா முறை­மை­யி­லான இஸ்­லாமைப் பரப்ப வேண்டும் என்­பது அவர்­க­ளது கனவு.

ஹோம்ஸ் நீரிணை

ஈரானின் பூகோள இருப்பு முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது. கடல் மூல­மான உலக எரி­பொருள் வழங்­கலில் 40% ஈரானின் ஹோம்ஸ் நீரி­ணை­யூ­டாக நடக்­கி­றது.

Strait-of-HormuzStrait-of-Hormuz ஹோம்ஸ் நீரிணை

உலக மொத்த எண்ணெய் வழங்­கலில் இது 20% ஆகும். ஹோம்ஸ் நீரிணை, ஓமான் வளை­கு­டா­வையும் பார­சீக வளை­கு­டா­வையும் இணைக்கும் 35 மைல்கள் அக­ல­முள்ள நீரி­ணை­யாகும்.

நாளொன்­றிற்கு 15 எண்ணெய் தாங்கிக் கப்­பல்கள் இத­னூ­டாக பயணம் செய்­கின்­றன. சவூதி அரே­பியா, ஈராக், குவைத், பஹ்ரெய்ன், கட்டார், துபாய் போன்ற நாடு­களில் இருந்து ஏற்­று­ம­தி­யாகும் எரி­பொருள் ஹோம்ஸ் நீரிணை­யூ­டா­கவே நடக்­கின்­றது.

இந்த நீரி­ணையை மூடி­வி­டுவேன் என்று ஈரான் அடிக்­கடி மிரட்­டு­வ­துண்டு. அமெ­ரிக்கா இந்த நீரி­ணையை தனது கடற்­ப­டையின் கண்­கா­ணிப்பின் கீழ் வைத்­தி­ருக்­கின்­றது. அமெ­ரிக்­காவின் மேற்­கா­சிய நகர்­வு­க­ளுக்கு என்றும் பிரச்­சி­னை­யா­கவும் சவா­லா­கவும் இருப்­பது ஈரானே.

ஈரானின் பிராந்­திய ஆதிக்கக் கனவு

2015 மார்ச் மாதம் ஈரானின் அதிபர் ஹஸன் ரௌஹா­னியின் ஆலோ­சகர் அலி யூனிசி, ஈரான் ஒரு பேர­ரசு, ஈராக் அந்தப் பேர­ரசின் ஒரு பகுதி என்றார்.

அதற்கு ஒரு மாதத்­திற்கு முன்னர் ஈரா­னிய புரட்சிப் படை­யான கட்ஸ் படையின் வெளி­நாட்டுப் பிரிவின் தள­பதி காசிம் சுலைமான், இன்று ஈரான் தனது மதப் புரட்­சியை பஹ்ரேன் முதல் ஈராக் வரைக்கும், சிரியா முதல் யேமன் உள்­ளிட்ட வட ஆபி­ரிக்­கா­வ­ரைக்கும் ஏற்­று­மதி செய்யக் கூடிய நிலை உரு­வா­கி­யுள்­ளது என்றார்.

images2அலி கொமெய்­னி

இவை மட்­டு­மல்ல, 2014 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் ஈரா­னிய உச்சத் தலைவர் அலி கொமெய்­னிக்கு நெருக்­க­மான பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அல் ரெஜா ஜக்­கானி, தற்­போது பக்தாத், பெய்ரூட், டமஸ்கஸ், சனா ஆகிய நான்கு அரபுத் தலை­ந­க­ரங்கள் ஈரானின் கட்­டுப்­பாட்டில் உள்­ளன என்றார்.

இன்னும் சற்றுப் பின் சென்றால், 2013 ஆம் ஆண்டு அஸர்­பை­ஜானை ஈரா­னுடன் மீளி­ணைக்க வேண்டும் என்ற தீர்­மானம் ஈரா­னியப் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டது. அஸர்­பை­ஜானை சோவியத் ஒன்­றியம் ஓர் உடன்­ப­டிக்கை மூலம் ஈரா­னி­ட­மி­ருந்து 1828 ஆம் ஆண்டு பிரித்து தன்­னுடன் இணைத்துக் கொண்­டது.

அர­புக்கள் வேறு ஈரா­னி­யர்கள் வேறு

ஈரா­னி­யர்­களும் அர­புக்­களும் மதத்தால் ஒன்­று­பட்­டி­ருந்­தாலும் இனத்தால், மொழியால் வேறு­பட்­ட­வர்கள். மதத்தால் ஒன்­று­பட்­ட­வர்கள் என்று அழுத்திச் சொல்ல முடி­யாத அள­விற்கு ஷியா முஸ்­லிம்­க­ளான ஈரானியர்க­ளுக்கும் ஸுன்னி முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட பல அரபு நாடு­களும் முரண்­பட்டுக் கொள்­கின்­றன.

ஸுன்னி முஸ்­லிம்­களைக் கொண்ட துருக்கி, ஈரா­னுடன் நெருக்­க­மான உற­வு­களைப் பேணி வந்­தாலும் சிரியா விவ­கா­ரத்தில் இரண்டும் முரண்­ப­டு­கின்­றன. குர்திஷ் மக்களை ஒழிப்­பதில் இரு நாடு­களும் ஒத்­து­ழைக்­கின்­றன.

irakஈராக்

ஈராக்கில் ஸுன்னி இஸ்­லா­மிய அமைப்­பான ஐ.எஸ்.ஐ.எஸ். என்றும் ஐ.எஸ். ஐ.எல். என்றும் ஐ.எஸ். என்றும் அழைக்­கப்­படும் இஸ்­லா­மிய அர­சுக்கு எதி­ராக ஈரானே முன்­ன­ணியில் நின்று செயற்­ப­டு­கின்­றது.

ஷியா முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட ஈராக்கில் ஸுன்னி முஸ்­லி­மான சதாம் ஹுசெய்ன் நீண்­ட­காலம் ஆட்­சியில் இருந்தார். அவர் ஈரா­னுக்கு எதி­ராக நீண்ட போரையும் 1980 முதல் 1988 வரை நடத்­தினார்.

அவ­ரது பிராந்­திய ஆதிக்கக் கனவால் அவர் அமெ­ரிக்க ஆக்­கி­ர­மிப்பால் ஆட்­சியில் இருந்து விரட்­டப்­பட்டுக் கொல்­லப்­பட்டார்.

பின்னர் அமெ­ரிக்க ஆத­ர­வுடன் தேர்தல் மூலம் ஈராக்கில் ஷியா முஸ்­லிம்கள் ஆட்­சியைக் கைப்­பற்­றினர். இதைத் தொடர்ந்து ஈராக்­கி­லுள்ள ஸுன்னி முஸ்­லிம்­களின் அமைப்­பான ஈராக்­கிற்­கான அல்­கைதா ஐ.எஸ். என்னும் போராளி அமைப்­பாக மாறி­யது.

ஸுன்னிப் போரா­ளி­களும், சதாமின் படையில் இருந்த பாத் கட்சி வீரர்­களும் ஐ.எஸ்.ஸுடன் இணைந்து கொண்டனர்.

ஐ.எஸ். அமைப்பு ஸுன்னி முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட சிரி­யாவில் ஷியா முஸ்­லிம்­களின் ஒரு பிரி­வி­ன­ரான அல­வியா இனக்­கு­ழு­மத்­தி­னரின் ஆட்­சிக்கு எதி­ராகப் போரா­டு­வ­தாகச் சொல்லி சவூதி அரே­பியா, கட்டார் ஆகிய நாட்டுச் செல்­வந்­தர்­க­ளி­ட­மி­ருந்து பெரும் நிதியைப் பெற்றுக் கொண்டு ஈராக்­கிலும் சிரி­யா­விலும் பெரு நிலப்­ப­ரப்பைக் கைப்­பற்றிக் கொண்­டது.

0,,17866947_303,00அமெ­ரிக்­காவின் முதலாம் எதி­ரி­யாக ஐ.எஸ். அமைப்பு வளர்ந்து வரு­கின்­றது. இந்த ஐ.எஸ். அமைப்பை ஒழித்­துக்­கட்ட அமெ­ரிக்­காவும் விரும்­பு­கின்­றது; ஈரானும் விரும்­பு­கின்­றது. இதனால் அமெ­ரிக்­காவும் ஈரானும் ஈராக்கில் இணைந்து செயற்­ப­டு­கின்­றன.

indexசவூதி அரே­பியா

ஈரானின் பிராந்­திய ஆதிக்­கத்­திற்கு பெரும் சவால் விடும் நாடாக சவூதி அரே­பியா இருக்­கின்­றது. சவூ­தியில் ஷியா முஸ்­லிம்கள் வாழும் பிர­தே­சங்­களை தன்­னுடன் இணைக்க வேண்டும் எனவும் ஈரான் கரு­து­கின்­றது.

ஈரானின் நிக­ரா­ளி­களில் ஒன்­றான ஹமாஸ் அமைப்பை சவூதி அரே­பியா தனது பக்கம் இழுத்துக் கொண்­டி­ருக்­கின்­றது. ஹமாஸ் அர­சியற் துறைப் பொறுப்­பாளர் கலீட் மெஷாலும் மற்றும் பல உயர் மட்­டத்­தி­னரும் 2015 ஜூலை மாதம் சவூதி அரே­பி­யா­விற்குப் பயணம் மேற்­கொண்­டமை ஈரானை உலுப்­பி­ய­துடன் அதிர்ச்­சி­ய­டைய வைத்­துள்­ளது.

இதுவரை­ கா­லமும் ஹமாஸ் அமைப்­பிற்குத் தேவை­யான படைக்­க­லன்­களும் நிதியும் ஈரா­னி­ட­மி­ருந்தே கிடைத்­தன.

சவூதி அரே­பி­யா­வுடன் உறவை வளர்த்தால் அதன் மூலம் எகிப்­திய அரசு மூடி வைத்­தி­ருக்கும் ரஃபாக் கட­வையைத் திறக்க வைக்­கலாம் என ஹமாஸ் அமைப்பு நம்­பு­கின்­றது.

ஈரான் அணு­குண்டு தயா­ரித்தால் பாகிஸ்­தா­னி­ட­மி­ருந்து அணு­குண்டை வாங்கும் திட்­டத்­துடன் சவூதி அரே­பியா இருக்­கின்­றது.

லெபனான்

முதலாம் உலகப் போரின் பின்னர் மேற்­கா­சி­யாவில் ஒரு கிறிஸ்­தவ நாடு தேவை என லெபனான் உரு­வாக்­கப்­பட்­டது. ஆனால், காலப்­போக்கில் அங்கு இஸ்­லா­மி­யரே பெரும்­பான்­மை­யாகி­விட்­டனர்.

பலஸ்­தீ­னத்­தி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்­தோ­ராலும் அவர்கள் மீது தாக்­குதல் நடத்தும் இஸ்­ரே­லாலும் லெபனான் குழப்பம் மிக்க நாடாக இருக்­கின்­றது.

லெப­னா­னி­லி­ருந்து யஸீர் அரபாத் தலை­மை­யி­லான பலஸ்­தீன விடு­தலை இயக்­கத்தை சிரியா படை­யெ­டுத்து விரட்­டி­யதன் பின்னர் அங்­குள்ள எஞ்­சிய பலஸ்­தீ­னி­யர்­களால் இஸ்­ரேலின் அட்­டூ­ழி­யத்­திற்கு எதி­ராக உரு­வாக்கப்பட்ட ஹிஸ்­புல்லா அமைப்பு, மத்­திய தரைக் கடலில் உள்ள ஈரானின் விமானம் தாங்கிக் கப்பல் என விமர்­சிக்­கப்­ப­டு­கின்­றது.

hezbollahஹிஸ்­புல்லா அமைப்­பிற்கு படைக்­க­லன்­களும் நிதியும் வழங்கும் ஈரான் தனது பிராந்­திய ஆதிக்­கத்தை லெப­னானில் உள்ள ஹிஸ்­புல்லா மூலம் முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

சிரியா

சிரி­யாவில் ஸுன்னி ஐ.எஸ். அமைப்பும் சிரிய அதிபர் அல் பஷார் அசாத்­திற்கு எதி­ரான சுனிக் கிளர்ச்­சிக்­கா­ரர்­களும் ஒரு தரப்­பி­ன­ருடன் மற்றத் தரப்­பினர் போராடி அழிந்து கொள்­வது ஈரா­னிற்கு மகிழ்ச்­சி­யூட்டும் ஒன்று.

லெப­னானில் செயற்­படும் ஷியா முஸ்லிம் தீவி­ர­வாத அமைப்­பான ஹிஸ்­புல்­லா­விற்­கான விநி­யோகம் ஈரா­னி­லி­ருந்து சிரிய விமான நிலை­யங்­க­ளூ­டாக நடைபெறு­கின்­றது.

இதனால் சிரியா ஈரானைப் பொறுத்­த­வரை முக்­கி­ய­மான ஒரு நாடாகும். அதிபர் அஸாத்தைப் பாது­காக்க ஈரான் பணம், படைக்­கலன் ஆகி­ய­வற்றை வழங்­கு­வ­துடன் லெப­னானில் உள்ள ஹிஸ்­புல்லாப் போரா­ளி­களை அஸாத்தின் படை­க­ளுடன் இணைந்து கிளர்ச்­சிக்­கா­ரர்­க­ளுக்கு எதி­ராகப் போராட வைக்­கின்­றது.

ஈராக்கும் சிரி­யாவும் ஈரானின் ஆதிக்­கத்­திற்குள் வந்தால் அடுத்­ததாக லெபனான் இல­கு­வாக ஈரானின் கட்டுப்பாட்­டிற்குள் வந்­து­விடும். ஈரானும் சிரி­யாவும் லெப­னா­னு­ட­னான எல்­லையை தமது கட்­டுப்­பாட்­டிற்குள் வைத்­தி­ருப்­பதில் அதிக அக்­கறை காட்­டு­கின்­றன.

ஐக்­கிய அமீ­ரகம்

ஈரா­னுக்கும் ஐக்­கிய அமீ­ர­கத்­திற்கும் இடையில் ஹோம்ஸ் நீரி­ணையில் உள்ள Greater Tunb, Lesser Tunb, Abu Musa ஆகிய மூன்று தீவு­களும் யாருக்குச் சொந்தம் என்­பது தொடர்­பாக முறுகல் நிலை உண்டு. அரபு லீக் நாடுகள் ஐக்­கிய அமீ­ரகம் தமக்கு கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த நாடு எனக் கரு­து­கின்­றனர்.

ஈரானின் நிக­ராளிப் போர்கள்

(Proxy Wars)

ஈரான் தற்­போது சிரிய அர­சி­னூ­டா­கவும் ஹிஸ்­புல்­லாவின் உத­வி­யு­டனும் சிரிய அர­சுக்கு எதி­ரான ஒரு நிக­ராளிப் போரையும், ஈராக்கில் அதன் அர­சி­னூ­டாக ஐ.எஸ். அமைப்­பிற்கு எதி­ரான ஒரு நிக­ராளிப் போரையும், யேமனில் சவூதி அரே­பி­யா­விற்கு ஆத­ர­வான அர­சுக்கு எதி­ராக ஹெளதி இனக்­கு­ழுமப் போரா­ளி­க­ளூ­டாக ஒரு நிக­ராளிப் போரையும் நடாத்தி வரு­கின்­றது.

நிக­ராளிப் போர் நேரடிப் போரிலும் பார்க்கச் செலவுமிக்­கது. அரபு ஸுன்னி முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட சிரி­யாவை ஈரானின் ஆதிக்க நாடாக மாற்­று­வது இய­லாத ஒன்று.

அப்­பி­ராந்­தி­யத்தில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் துருக்­கி­யையும் சவூதி அரே­பி­யா­வையும் மிஞ்சி இதைச் சாதிக்க வேண்டும்.

அமெ­ரிக்கா சிரி­யாவில் ஸுன்னி முஸ்­லிம்­களின் ஆட்­சியை விரும்­பு­கின்­றது. ஈராக்கில் ஐ.எஸ். அமைப்பு ஈரான், ஈராக்­கிய அரசு, ஐக்­கிய அமெ­ரிக்கா ஆகி­ய­வற்றின் தாக்­கு­தலை எதிர்கொள்­கின்­றது.

ஐ.எஸ். அமைப்பை அங்கு ஒழித்துக் கட்­டி­னாலும் மொழி­யாலும் இனத்­தாலும் வேறு­பட்ட ஈராக்கை ஈரான் தனது ஆதிக்­கத்தின் கீழ் கொண்டு வரு­வதும் கடினம். யேமனைப் பொறுத்­த­வரை அது சவூதி அரே­பி­யாவின் கொல்லைப் புறம். ஈரா­னுக்கு ஆத­ர­வான ஹெளதி இனக்­கு­ழுமம் எண்­ணிக்கை அளவின் குறை­வா­னது.

ஈரா­னிற்கு “சூழ்”நிலை சரியில்லை

ஈரானைச் சுற்­ற­ிவர ஸுன்னி முஸ்­லிம்­களின் நாடு­களே இருக்­கின்­றன. தென் கிழக்கில் ஒரு நீண்ட எல்­லை­யுடன் சவூதி அரே­பி­யாவும் வட­கி­ழக்கில் அமெ­ரிக்­காவின் நட்பு நாடான துருக்­கியும் கிழக்கில் உறு­தி­யற்ற ஆட்­சி­யையும் பெரும்­பான்மை ஸுன்னி முஸ்­லிம்­க­ளையும் கொண்ட சவூதியின் நட்பு நாடான பாகிஸ்­தானும் மேற்கில் ஈரானுடன் எட்டு ஆண்டுகள் போர் புரிந்த ஈராக்கும் ஈரானுக்கு நட்பு நாடுகள் என்பது குறைவு.

சீனாவும் ரஷ்யாவும் அவ்வப்போது அரசுறவியலில் (இராஜதந்திரத்தில்) ஈரானுக்குச் சார்பாக நடந்து கொண்டாலும் அவை ஈரானின் கேந்திரோபாய நட்பு நாடுகள் அல்ல. இந்த இரு வல்லரசுகளும் ஈரானுக்குத் தேவையான நேரங்களில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தமது இரத்து (வீட்டோ) அதிகாரங்களைப் பாவித்ததில்லை. உலக அரங்கில் ஈரான் ஒரு தனித்து நிற்கும் நாடாகும்.

ஈரானின் பாதுகாப்புச் செலவீன த்திலும் பார்க்க சவூதியின் பாதுகாப்புச் செலவீனம் நான்கு மடங்கானது. ஈரான் தனது படைக்க லன்களில் பெரும் பகுதியைத் தானே உற்பத்தி செய்கின்றது.

அவற்றை அவ்வப்போது லெபனானிலும் காஸா நிலப்பரப்பிலும் பரீட்சித்து வருகின்றது. சவூதி அரேபியா, ஐக்கிய அமீரகம், கட்டார் போன்ற செல்வம் மிகுந்த அரபு நாடுகள் அரபு நாடல்லாத ஈரான் அரபு நாட்டில் ஆதிக்கம் செலுத்த அனு மதிக்காது.

Share.
Leave A Reply