நாட்­டுக்­கா­கவும், மக்­க­ளுக்­கா­கவும் பாரா­ளு­மன்­றத்தில் அனை­வரும் ஒன்­று­பட்டு இணக்­கப்­பாட்டு அர­சி­யலை முன்­னெ­டுப்போம். இதற்­காக அர­சுடன் அனைத்து அர­சியல் கட்­சி­களும் இணையவேண்­டு­ம்

என்று பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பகி­ரங்­க­மாக வேண்­டுகோள் விடுத்தார்.

மாவட்ட அபி­வி­ருத்தி அதி­கார சபைகள் அமைக்­கப்­பட்டு கிராம ராஜ்­ஜி­யங்கள் ஊடாக அதி­காரம் பரவலாக்கப்படும் என்றும் பிர­தமர் தெரி­வித்தார்.

அல­ரி­மா­ளி­கையில் நேற்று புதன்­கி­ழமை ஊட­க­வி­ய­லா­ளர்­களைச் சந்­தித்து விசேட அறிக்கை விடுத்து உரையாற்றும் போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்தப் பகிரங்க அழைப்பை விடுத்தார்.

அல­ரி­மா­ளி­கையில் திறந்தவெளி­யி­லேயே ஊட­க­வி­ய­லா­ள­ரு­ட­னான இந்த விசேட சந்­திப்பு இடம்­பெற்­றது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் துணை­வியார் மைத்­திரி விக்­கி­ர­ம­சிங்­கவும் இந் நிகழ்வில் கலந்துகொண்­டனர்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;

ஜன­வரி 8ஆம் திகதி இந்­நாட்டில் இடம்­பெற்ற புரட்­சிக்கு கடந்த 17ஆம் திகதி மக்கள் ஆணை வழங்கி அதனை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

நான் பிர­தமர் பத­வியை உத்­தி­யோகபூர்­வ­மாக ஏற்றுக்கொண்ட பின்னர் எம்.பி.மார்­களை இணைத்துக் கொண்டு நல்­லாட்­சியை தொடர தயா­ரா­யி­ருக்­கிறேன்.

இது தொடர்­பாக நேற்று (செவ்வாய்க் கிழமை) ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை­களை நடத்­தினேன்.

பிர­த­ம­ராக நான் பத­வி­யேற்ற பின்னர். இரண்­டொரு தினங்­களில் புதிய அமைச்­ச­ரவை நிய­மிக்­கப்­படும் என்றும் நல்­லாட்­சியை தொடர்­வது தொடர்­பா­கவும் ஜனா­தி­ப­தி­யுடன் பேசினேன்.

நாட்டு மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­கா­கவும் நாட்டின் நன்­மைக்­கா­கவும் அனை­வரும் இணைந்து இணக்­கப்­பாட்டு அர­சி­யலை முன்னெடுக்க நாம் தீர்­மா­னித்­துள்ளோம்.

எதிர்­வரும் புதிய பாரா­ளு­மன்­றத்தில் நாட்­டுக்­கா­கவும் மக்­க­ளுக்­கா­கவும் அனை­வரும் ஒன்­றி­ன­ணந்து இணக்கப்பாட்டு அர­சி­யலை முன்­னெ­டுப்போம். அதற்­காகப் புதிய அர­சுடன் அனை­வரும் இணைந்து அமைச்சுப் பத­வி­களை ஏற்றுக் கொண்டு நல்­லாட்­சியின் பங்­கா­ளர்­க­ளாக வேண்டும்.

இதற்­காக அனைத்து அர­சியல் கட்­சி­க­ளுக்கும் நான் பகி­ரங்­க­மாக அழைப்பு விடுக்­கின்றேன்.

அர­சுடன் இணைந்து நல்­லாட்­சியை முன்­னெ­டுத்துச் செல்வோம். மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு இணைக்கப்பாட்டுடன் தீர்­வு­களைக் காண்போம்.

பாரா­ளு­மன்­றத்தில் தற்­போ­துள்ள செயற்­கு­ழுக்­க­ளை­விட மேல­தி­க­மாக செயற்­கு­ழுக்கள் அமைக்­கப்­படும்.

ஆலோ­சனைக் குழுக்கள் அமைக்­கப்­படும். இதில் எம்.பி.க்களின் பிர­தி­நி­தித்­துவம் அதி­க­ரிக்­கப்­படும். மாவட்ட அபி­வி­ருத்தி அதி­கார சபைகள் அமைக்­கப்­படும்.

அத்­தோடு கிராம ராஜ்­ஜி­யங்­களை உரு­வாக்கி சிவில் அமைப்­புக்கள், மதத் தலை­வர்­களின் ஆலோ­ச­னைகள் பெற்றுக் கொள்­ளப்­படும். இத­னூ­டாக அதி­காரம் பர­வ­லாக்­கப்­படும்.

நான் முன்­வைத்­துள்ள கொள்கைத் திட்­டத்தை பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைத்து அதற்கு அர­சியல் கட்­சி­களின் ஆத­ரவு பெற்றுக் கொள்­ளப்­படும்.

இணைக்­கப்­பாட்டு அர­சி­ய­லுடன் நல்­லாட்­சியும் நலன்­புரித் திட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­படும். ஜனாதிபதியுடனான சந்­திப்­பிலும் இதனைத் தெரி­வித்தேன். எனவே இதி­லி­ருந்து எவ­ருக்கும் விடு­பட முடி­யாது.

இத் தேர்­தலில் நீதி நியாயம் நிலை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளது. எமது அர­சியல் கலா­சா­ரமும் புதுப்­பிக்­கப்­பட வேண்டும். தேசிய வேலைத்திட்டத்திற்கு அனைவரதும் ஆதரவும் பெற்றுக்கொள்ளப்பட்டு “விச்சவி” அரசியல் முறைமையில் ஆட்சி முன்னெடுக்கப்படும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கொள்கைப் பிரகடனத்தை வெளியிடுவார். அதனோடு இணைத்து எமது அரசியல் திட்டங்களை முன்னெடுப்போம்.

இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தேசிய அரசாங்கம் அமைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு

150706112619_maithri_cbk_ranil_640x360_ranilwilckramasinghe

இலங்கையில் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான ஆதரவைத் தருவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்று தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி சிறிசேனவின் வேண்டுகோளுக்கிணங்க தேசிய அரசுக்கு ஆதரவு தர ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முடிவுசெய்துள்ளது. மேலும், சந்திரிகா குமாரதுங்க தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை அக்கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் கட்சித் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது சம்பந்தமாக ஆராயப்பட்டதாக ஊடகங்களிடம் கூறிய அக்கட்சியின் துணைச் செயலாளர் துமிந்த திசாநாயக்க, ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய பெரும்பான்மை ஆசனங்களை பெற்ற ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு மத்தியக் குழு அனுமதி வழங்கியதாகத் தெரிவித்தார்.

இந்த தேசிய அரசாங்கம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் தலைமையில் சிறப்புக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவில் முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா , சரத் அமுனுகம , மகிந்த சமரசிங்க, எஸ்.பி. திசாநாயக்க, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இந்தக் குழு தேசிய அரசாங்கம் அமைப்பது சம்பந்தமான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென்றும் துமிந்த திசாநாயக்க கூறினார்.

குறைந்தபட்சம் இரண்டு வருடங்களுக்காவது இந்த தேசிய அரசாங்கம் செயல்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply