இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள பட்டியலை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. வீரர்களின் ஊதியம் ஏ, பி, சி என்ற மூன்று நிலைகளில் பிரிக்கப்படுகிறது. வீரர்களின் செயல்பாடு, அனுபவம் ஆகியவற்றை வைத்து வீரர்களுக்கு வீரர் சம்பளம் வேறுபடும்.

அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் தோனி, டெஸ்ட் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களின் அடிப்படை ஊதியம் ஒரு கோடி ஆகும். ‘ஏ’ பிரிவில் டோனி, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, அஸ்வின், புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ. 1 கோடி வழங்கப்படும். 1 டெஸ்ட் போட்டிக்கு ரூ. 5 லட்சமும், ஒருநாள் போட்டி ஒன்றுக்கு 3 லட்சமும் சம்பளமாக வழங்கப்படுகிறது.

பிரிவு ‘பி’யில் ஓஜா, புஜாரா, முரளிவிஜய், ஜடேஜா, இஷாந்த் சர்மா, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், உமேஷ் யாதவ், ரஹானே, அம்பத்தி ராயுடு, முகமது சமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ. 50 லட்சமாக கிடைக்கும். ஒரு டெஸ்ட் போட்டிக்கு 3 லட்சம், ஒரு ஒருநாள் போட்டிக்கு 1.75 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது.

பிரிவு ‘சி’யில் மிஸ்ரா, ஆரோன், சகா, பின்னி, புன்காஜ் சிங், வினய் குமார், மோகித் சர்மா, குல்கர்னி, ரசூல், அக்சர் படேல், திவாரி, உத்தப்பா, கரண் சர்மா, சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், ராகுல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.25 லட்சம், ஒரு டெஸ்ட் போட்டிக்கு 1.5 லட்சமும், ஒரு ஒருநாள் போட்டிக்கு 1 லட்சமும் வழங்கப்படுகிறது.

இது தவிர, டெஸ்ட் தரவரிசையில் 3 இடங்களுக்குள் உள்ள அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் போனசாக 50 சதவீத கூடுதல் ஊதியம் கிடைக்கும்.

டி20 உலகக் கோப்பை அல்லது 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றால் 300 சதவீதம் அதிகமாக ஊதியம் வழங்கப்படும்.

டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டியில் சதம் அடித்தால் ரூ 5 லட்சம், இரட்டை சதம் அடித்தால் ரூ.7 லட்சம் பேட்ஸ்மேன்களுக்கு கிடைக்கும்.

அதேபோல் பந்து வீச்சாளர்களுக்கு ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட் வீழ்த்தினால் ரூ. 5 லட்சமும், 10 விக்கெட் வீழ்த்தினால் ரூ. 7 லட்சமும் வழங்கப்படுகிறது.

கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார் சங்கக்கார

உலக அளவில் கிரிக்கெட் போட்டியில் ஆளுமை செலுத்தி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தனது கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.


சங்கக்கார இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 38 சதங்கள் அடித்துள்ளார்

இந்தியாவுக்கு எதிராக கொழும்பில் வியாழக்கிழமை தொடங்கிய போட்டியே அவர் கடைசியாக விளையாடும் டெஸ்ட் போட்டியாகும்.

குமார் சங்கக்கார கடந்த 2000ஆம் ஆண்டு காலி கிரிக்கெட் மைதானத்தில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அந்தப் போட்டியில் அவர் நிக்கி போயே வீசிய பந்தில் 23 ஓட்டங்களை முதல் ஆட்டத்தில் எடுத்து ஆட்டமிழந்தார்.

அந்தப் போட்டியில் இலங்கை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 15 ஓட்டங்களால் வென்றது.


டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 12,350 ஓட்டங்களை எடுத்துள்ளார் குமார் சங்கக்கார

சங்கக்கார தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை இதுவரை 38 சதங்களும் 52 அரை சதங்களும் அடித்துள்ளார்.

இதுவரை 133 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள குமார் சங்கக்கார 12,350 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

அதில் 38 சதங்களும், 52 அரைச் சதங்களும் அடங்கும்.

கடந்த 2014ஆம் ஆண்டு வங்கதேசத்தில் சிட்டகாங் நகரில் அந்நாட்டுக்கு எதிரான ஒரு போட்டியிலேயே அவர் மிக அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 319 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

Share.
Leave A Reply