ஓட்டுனர்களின் வேலை ஆபத்துகள் நிறைந்தது என்பது தெரிந்ததே. அதிலும், மோசமான சாலைநிலைகளில் கனரக வாகனங்களை இயக்குபவர்களின் பாடு சொல்லி மாளாது.

எந்த சாலையிலும், எப்போது வேண்டுமானாலும் ஆபத்தும், விபத்தும் ஏற்படும் வாய்ப்புகளுக்கு இடையில் தங்களது சாமர்த்தித்தையும், திறமையையும் பயன்படுத்தி அவர்கள் ஒவ்வொரு நாளையும் கடந்து வருகின்றனர்.

இந்தநிலையில், இந்தியாவின் மிக மோசமான நில அமைப்பையும், அதிக சுற்றுலா தலங்களையும் கொண்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் அரசு போக்குவரத்து கழகத்தின் பஸ்களை இயங்கும் இந்த ஓட்டுனர்களின் அன்றாட பணியை கண்டால் நெஞ்சில் பதட்டம் தொற்றிக் கொள்கிறது.

அவர்களது நெஞ்சுரமும், சாமர்த்தியமும் அசரடிக்கிறது. படங்களை பார்த்தால் இவர்கள்தான் இந்தியாவின் சிறந்த ஓட்டுனர்கள் என்று கூறிவிடுவீர்கள்.

27-1427461870-himachal-bus-1இவ்வாறான சாலைகள்தான் இவர்களுக்கு நெடுஞ்சாலைகள்.

27-1427461876-himachal-bus-2அபாயகரமான வளைவிலும் அசாதாரணமாக திருப்பும் ஓட்டுனர்.

27-1427461883-himachal-bus-3இது மாதிரி ஒரு சாலையை பார்த்துண்டா?

27-1427461889-himachal-bus-4இருக்கின்ற இடத்தில் இதுபோன்ற தடைகளையும் கடக்க வேண்டும்.

27-1427461897-himachal-bus-5இந்த மோசமான சாலைகளிலும் கூடுதலாக கேரியரிலும் பயணிகளை ஏற்றிக்கொண்டு சாமர்த்தியமாக செல்லும் ஓட்டுனர்.

27-1427461904-himachal-bus-6இதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலையையும் தாண்ட வேண்டும்.

27-1427462096-himachal-bus-7எண்ணெய் ஊற்றிய கண்ணாடியில் நடப்பது போன்றதுதான் இவர்கள் பணி

27-1427461917-himachal-bus-8பனிக்கட்டிகள் சிறிது சரிந்தாலும் முடிந்தது சோலி.

27-1427461924-himachal-bus-9பனிபோர்த்திய மலைகளுக்கு இடையே திக் திக் பயணம்.

27-1427461930-himachal-bus-10

நம்மூரில் பஞ்சராகி டூல்ஸ் கேட்டால் கூட நிறுத்தமாட்டார்கள். ஆனால், அங்கு நிலைமையே வேறு. சாலை ஓரத்தில் சிக்கிய பஸ்சை மீட்கும் பணியில் சக ஓட்டுனர், நடத்துனர்களின் ஒத்துழைப்பு.27-1427461937-himachal-bus-11ஆபத்துக்களை வென்று சீறிப்பாயும் பஸ்.
27-1427461942-himachal-bus-12வழுக்கும் தன்மையுடையே மலைச்சாலையில் பஸ்சை முன்னேற்றும் பணியில் ஓட்டுனர்.
busகர்ணம் தப்பினால் மரணம்… தினசரி இந்த சாலைகளில் ஓட்டுவதுதான் இவர்களது முழு நேரப்பணி.
27-1427461955-himachal-bus-14சிறிய கல் பெயர்ந்து விழுந்தாலும் முடிந்தது கதை.
27-1427461961-himachal-bus-15கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சாலைகள்தான் இவர்களுக்கு சீறிச்செல்வதற்கான நெடுஞ்சாலைகள்
27-1427461968-himachal-bus-16ஆபத்து ஒருபுறம், கண்ணுக்கு இனிமையான சூழல் மறுபுறம்…
27-1427461974-himachal-bus-17இந்த ரோடு எப்படியிருக்கு?
27-1427461980-himachal-bus-18

 இதையெல்லாம் தினசரி கடக்க வேண்டும்.
27-1427461987-himachal-bus-19

 எந்தவொரு அபாயத்தையும் பொருட்படுத்தாது போக்குவரத்து வசதியை வழங்கும் ஓட்டுனர்.
27-1427461993-himachal-bus-21தெய்வமாக கருதும் தங்களது பஸ்களுடன் ஓட்டுனர்கள். கோடிகளை கொட்டி கொடுத்தாலும் செய்ய முடியாத இந்த தினசரி பணியை, உயிரை துச்சமாக மதித்து பணியை சேவையாக கருதும் இந்த ஓட்டுனர்களுக்கு ஓர் சல்யூட்…!!
Share.
Leave A Reply