மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் தம்பதி தூங்கிய படுக்கையில் நிர்வாணமாக ஒருவர் படுத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருக்கும் மரூப்ரா நகரைச் சேர்ந்தவர் கேட்டி. அவர் தனது லிவ் இன் பார்ட்னர் கிறிஸுடன் சேர்ந்து வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு அவர்கள் இருவரும் ஒரே படுக்கையில் தூங்கியுள்ளனர். இரவு 2 மணிக்கு கண் விழித்த கேட்டி அதிர்ச்சி அடைந்தார்.

காரணம் படுக்கையில் தனது வலப்புறத்தில் யாரோ ஒரு 25 வயது நபர் அதுவும் நிர்வாணமாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

இதைப் பார்த்து அலறிய கேட்டி தனது பார்ட்னர் கிறிஸை எழுப்பினார். இதற்கிடையே நிர்வாணமாக தூங்கிய வாலிபரும் எழுந்துவிட்டார்.

கிறிஸ் அந்த வாலிபரை பிடித்து வீட்டின் பின்புறத்தில் உள்ள இடத்தில் அடைத்து வைத்துவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் கிடைத்த உடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த வாலிபரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த குற்றத்திற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் அயர்லாந்தைச் சேர்ந்தவர். அவர் திறந்திருந்த ஜன்னல் வழியாக வீட்டிற்குள் வந்திருக்க வேண்டும் என்று கேட்டி, கிறிஸ் கருதுகிறார்கள்.

Share.
Leave A Reply