ஹபுர்: உத்தரப்பிரதேச மாநில ரயில் நிலையம் ஒன்றில் மது போதையில் போலீஸ்காரர் ஒருவர் உள்ளாடைகளுடன் ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலியே பயிரை மேய்ந்த கதையாகத் தான் இருக்கிறது சமீபகாலமாக போலீஸாரின் நடவடிக்கைகள். மக்களைக் காக்கும் பணியில் இருக்கும் போதே, அவர்கள் மது குடிப்பது, ரகளை செய்வது, லஞ்சம் வாங்குவது, பெண்களிடம் ஆபாசமாகப் பேசுவது என அவர்களின் தவறான நடவடிக்கைகள் அவ்வப்போது வீடியோ மற்றும் போட்டோக்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் போலீஸ்காரர் ஒருவர் ரயில் நிலையம் ஒன்றில் உள்ளாடையுடன் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் மது போதையில் உள்ள அந்தப் போலீஸ்காரரை மற்ற காவலர்கள் வலுக்கட்டாயமாக போலீஸ் ஸ்டேஷன் உள்ளே இழுத்துச் செல்ல முற்படுகின்றனர்.
ஆனால், அவர் வர மறுத்து பிடிவாதமாக அங்கேயே அமர்ந்திருக்கிறார். மேலும் ரயில்வே அதிகாரிகளுடனும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அவர்களைத் திட்டியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, நான்கு போலீஸார் சேர்ந்து, அவரை குண்டுக் கட்டாகத் தூக்கி செல்கின்றனர். இந்தச் சம்பவம் டெல்லிக்கு அருகே உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹபுர் பகுதியில் நடந்துள்ளது.

Share.
Leave A Reply