அம்பாறை மாவட்டத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலை விட இம்முறை 18ஆயிரத்து 319 வாக்குகள் அதிகமாக அளிக்கப்பட்டுள்ளன.
2010இல் 26ஆயிரத்து 894 வாக்குகள் த.தே.கூட்டமைப்பிற்குக் கிடைக்கப்பெற்றன. இம்முறைத் தேர்தலில் 45ஆயிரத்து 213 வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது 18ஆயிரத்து 319 வாக்குகள் அதிகமாக அளிக்கப்பட்டுள்ளன.
கூடுதலான வாக்குகள் பொத்துவில் தொகுதியில் அளிக்கப்பட்டுள்ளன. அங்கு கடந்த தேர்தலில் 14248 வாக்குகள் அளிக்கபட்டிருந்த அதேவேளை இம்முறை 25147 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.சுமார் 10ஆயிரம் வாக்குகள் இங்கு கூடுதலாகும்.
சம்மாந்துறைத் தொகுதியில் கடந்த தடவை 3972 வாக்குகளும் கல்முனைத்தொகுதியில் 7947வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. இம்முறை அத்தொகை முறையே 7540 வாக்குகளாகவும் 10847வாக்குகளாகவும் உயர்ந்துள்ளன.
கடந்த தடவை தபால் வாக்குகள் 713 .ஆனால் இம்முறை 1854ஆக உயர்ந்துள்ளது.
கடந்த தடவை 11ஆயிரத்து 130 வாக்குகளைப் பெற்று பொடியப்பு பியசேன எம்.பி.யாகத் தெரிவாகியிருந்தார். இம்முறை 17779ஆயிரத்து வாக்குகளைப்பெற்ற அரியநாயகம் கவிந்திரன் கோடீஸ்வரன் ரொபின் எம்.பியாகத்தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதுவரை தெரிவான த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுள் அதிகூடிய வாக்குகளைப்பெற்றவர் கோடீஸ்வரன் ரொபின் என்பவர் குறிப்பிடத்தக்கது.