சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட 196 உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவினால் வழங்கப்பட்ட ஆணைக்கு அமைய, இந்த சிறப்பு வர்த்தமானி நேற்று மாலை அரசாங்க அச்சகத்தினால் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
இதில் மாவட்ட ரீதியாக – ஒவ்வொரு கட்சிகளில் இருந்தும் தெரிவாகியுள்ள- 196 உறுப்பினர்களின் விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
அதேவேளை, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் இதில் இடம்பெறவில்லை.
தேசியப் பட்டியல் ஆசனங்களைப் பெற்ற அரசியல் கட்சிகள், தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு ஒரு வாரத்துக்குள் தமது உறுப்பினர்களின் பெயர்களை அறிவிப்புமாறு சிறிலங்கா தேர்தல்கள் திணைக்களம் கோரியுள்ளது.
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கியுள்ள சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை இந்த இணைப்பில் பார்வையிடலாம்
http://documents.gov.lk/Extgzt/2015/PDF/Aug/1928_03/1928_03%20E.pdf