ஹொரணையிலிருந்து ஹட்டன் வழியாக நுவரெலியா நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று இன்று காலை 07.30 மணியளவில் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் செனன் வூட்லேண்ட் பகுதியில் பிரதான வீதியை விலகி 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 30 பேரில் 13 பேர் படுங்காயமடைந்து வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சாரதிக்கும் ஏனைய 17 பேருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் இதில் சிறுவர்கள் இருந்ததாகவும் பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.