மும்பை: பாலிவுட்டில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகை கங்கனா ரனாவத். அவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் ரூ.11 கோடி மட்டுமே. பாலிவுட் முன்னணி ஹீரோயின்கள் பலர் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுவதற்கே ரூ.2 முதல் 3 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள்.
இந்நிலையில் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் என்ற விவரம் தெரிய வந்துள்ளது. அவர் வேறு யாரும் அல்ல நடிப்புக்கு பெயர் போன கங்கனா ரனாவத் தான்.

20-1440064738-kangana-ranaut41-600

கங்கனா
க்வீன் மற்றும் தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டான பிறகு கங்கனா தனது சம்பளத்தை ஓரேயடியாக உயர்த்திவிட்டார் என்று கூறப்பட்டது. இல்லை இல்லை நான் சம்பளத்தை உயர்த்தவில்லை என்று கூறி வந்தார் கங்கனா.

05-1430824097-3kangana-ranaut

சம்பளம்
க்வீன், தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படங்களை அடுத்து தான் ஒப்புக் கொண்ட படத்தில் நடிக்க கங்கனா ரூ.11 கோடி சம்பளம் வாங்கியுள்ள விவரம் தெரிய வந்துள்ளது.

article_1434364915-kangana ranaut (2)

நியாயம் தானே
பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை நீங்கள் தானாமே என்று செய்தியாளர்கள் கங்கனாவிடம் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், நான் நடிக்கும் கதாபாத்திரம் அல்லது படத்திற்கு ஓராண்டு காலம் தேவைப்படுகிறது. அதனால் அதிக சம்பளம் வாங்குவது நியாயம் தானே என்றார்.
20-1440064750-kangana-ranaut
கட்டி பட்டி
கங்கனா இம்ரான் கானுடன் ஜோடி சேர்ந்து கட்டி பட்டி என்ற காதலும், காமெடியும் கலந்த படத்தில் நடித்துள்ளார். நிகில் அத்வானி இயக்கியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 18ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

பெரிதான மார்பகங்களைப் பெற செயற்கை மார்பகங்களை பொருத்திய நடிகைகள்!!!

Share.
Leave A Reply