மட்டக்களப்பு பிரான் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பிரதேச சபை வீதியைச் சேர்ந்த முகமட் சாஹிப் பாத்திமா மௌபியா (வயது 32) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை மாலை உறவினர்களுடன் மோட்டார் சைக்கிளில் கிரான் பிரதேசத்திற்கு சுற்றுலாவிற்காக சென்றவேளை வீதியின் குறுக்கே காணப்பட்ட பள்ளத்தில் தாங்கள் பயணம் மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் வீழ்ந்ததினால் பின்னால் இருந்த குறித்த நபர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் மோட்டர் சைக்கிள் செலுத்தியவரை வாழைச்சேனை பொலிசார் தடுத்து வைத்து விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில்..விபத்தில் இளைஞர் பலியானதையடுத்து மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்- (படங்கள்) 

21-08-2015

padamமட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலையிறவு பாலத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பொதுமக்கள் பாலத்தினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் பக்கச்சார்பாக நடந்துகொண்டுள்ளதாக தெரிவித்தே பொதுமக்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.

இன்று காலை 7.00 மணியளவில் மட்டக்களப்பு நோக்கி வேலைக்கு சென்றுகொண்டிருந்த கன்னன்குடாவை சேர்ந்த 27வயதுடைய கே.சுதாகரன் என்ற இளைஞனை மண் ஏற்றிகொண்டு வந்த கன்டர் வாகனம் மோதியுள்ளது.

இதன்போது இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் உடனயாக விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தினை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்றுள்ளனர்.

எனினும் உரிய விசாரணையினை மேற்கொள்ளாமல் பொலிஸார் வாகனத்தினை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றதாக தெரிவித்து பொதுமக்கள் வலையிறவு பாலத்தினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதன் காரணமாக வவுணதீவு பிரதேசத்தில் உள்ள அரச மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள் செல்லமுடியாதவாறு பாலத்தின் இரு மருங்கிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தமக்கு நீதி கிடைக்கும் வரை போக்குவரத்துக்கு வழிவிடமாட்டோம் என்று தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

582509023Betti-1

Share.
Leave A Reply