இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தேசிய அரசாங்கம் அமைத்துள்ள இரண்டு பிரதான அரசியல்கட்சிகளும் தங்களின் தேசியப் பட்டியல் மூலமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி பெற்றுள்ள வாக்குகளின் அடிப்படையில் 13 தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை அந்தக் கூட்டணி அறிவித்துள்ளது.
மலிக் சமரவிக்ரம (ஐக்கிய தேசியக் கட்சி)
கரு ஜயசூரிய (ஐக்கிய தேசியக் கட்சி)
டி.எம்.சுவாமிநாதன் (ஐக்கிய தேசியக் கட்சி)
அத்துரலியே ரத்தன தேரர் (ஜாதிக ஹெல உறுமய கட்சி)
டாக்டர் ஜயம்பதி விக்ரமரத்ன
வழக்கறிஞர் திலக் மாரப்பன
பேராசிரியர் சி.ஏ.மாரசிங்க
அனோமா கமகே
எம்.கே.டி.எஸ். குணவர்தன
சிறினால் டி மெல்
டாக்டர் ஏ.ஆர். ஹாஃபீஸ் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்)
எச்.எம். சல்மான் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்)
எம்.எச்.எம். நவாவி (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்)
ஆகியோர் ஐதேமு கூட்டணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ள வாக்குகளின் அடிப்படையில் 12 தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை அந்தக் கூட்டணி அறிவித்துள்ளது.
லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன
திலங்க சுமதிபால
சரத் அமுனுகம
டிலான் பெரேரா
விஜித விஜேமுனி சொய்ஸா
எஸ்.பி. திசாநாயக்க
மகிந்த சமரசிங்க
மலித் ஜயதிலக்க
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா
அங்கஜன் ராமநாதன்
ஏ.எச்.எம். ஃபவுஸி
ஃபைஸர் முஸ்தபா
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமாக உள்ள 29 தேசியப் பட்டியல் இடங்களில் 25 இடங்களை தேசிய அரசாங்கம் அமைத்துள்ள பிரதான இரண்டு ஆளும் கட்சிகளே பெற்றுள்ளன.
மூன்றாவது பெரிய கூட்டணிக் கட்சியாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2 இடங்களும் மக்கள் விடுதலை முன்னணி 2 இடங்களுமாக மிகுதி 4 தேசியப் பட்டியல் உறுப்பினர்களை பெற்றுள்ளன.