ஐக்­கிய தேசிய கட்­சியும் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து அமைக்­க­வுள்ள தேசிய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை இன்று பொறுப்­பேற்கும் சாத்­தியம் காணப்­ப­டு­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்­கவும் புதிய அமைச்­

சர்­க­ளுக்கு ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இன்று பதவிப் பிர­மாணம் செய்­து­வைக்­க­வுள்­ள­தாக அர­சியல் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கின்­றது.

அந்­த­வ­கையில் இன்­றைய தினம் 30 அமைச்­சர்­களும் 40 பிர­தி­ய­மைச்­சர்கள் மற்றும் இரா­ஜாங்க அமைச்­சர்­களும் பத­வி­யேற்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஐக்­கிய தேசிய கட்­சியின் 15 அமைச்சர்­களும் சுதந்திரக்கட்­சியின் 15 பேரும் இன்று பத­வி­யேற்­க­வுள்­ளனர். அத்துடன் இரண்டு பக்­கத்­தி­லி­ருந்தும் பிர­தி­ய­மைச்­சர்­களும் பத­வி­யேற்­க­வுள்­ளனர்.

ஏற்­க­னவே ஐக்­கிய தேசிய கட்­சியின் மூன்று பேர் நேற்று அமைச்­சர்­க­ளாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில் பொறுப்பேற்­றி­ருந்­தனர்.

இதே­வேளை அமைச்­சர்கள் மற்றும் இரா­ஜாங்க பிர­தி­ய­மைச்சுப் பத­விகள் தவணை தவ­ணை­யா­கவே வழங்கப்படும் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இன்று குறிப்­பிட்ட தரப்­பி­ன­ருக்கும் எதிர்­வரும் நாட்­களில் மற்றும் சில­ருக்கும் அமைச்சுப் பத­விகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

மொத்­த­மாக தேசிய அர­சாங்­கத்தில் அமைச்­ச­ரவை அமைச்­சர்­க­ளாக 50 பேர் நிய­மிக்­கப்­ப­டலாம் என்றும் அரசியல் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கின்­றது.

அதா­வது ஐக்­கிய தேசிய கட்­சியின் 33 பேரும் சுதந்­திரக் கட்சியின் 17 பேரும் அமைச்­சர்­க­ளாக நியமிக்கப்படவுள்ள­தா­கவும் அர­சியல் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரியவருகின்­றது.

இதே­வேளை சுதந்­திரக் கட்­சிக்கு வழங்­கப்­ப­ட­வுள்ள அமைச்­சுக்­க­ளி­லேயே தேர்­த­லின்­போது சுதந்­திரக் கட்சியிலி­ருந்து விலகி ஐக்­கிய தேசிய கட்­சியில் இணைந்து போட்­டி­யிட்ட ஐந்து பேருக்கும் அமைச்சுப் பத­விகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

மஹிந்த ராஜ­பக்ஷ சுதந்­திரக் கட­சியின் சார்பில் போட்­டி­யிட்­ட­மையே தாம் ஐக்­கிய தேசிய கட்­சியில் போட்டியிடக் காரணம் என்று குறித்த ஐந்து பேரும் கூறி­வ­ரு­கின்­றனர்.

எனவே அவர்­க­ளுக்கு ஐக்­கிய தேசிய கட்­சியின் கோட்­டா­வி­லேயே அமைச்சுப் பத­விகள் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அத்­துடன் பிர­தி­ய­மைச்­சர்­களை பொறுத்­த­மட்டில் சுதந்­திரக் கட்­சிக்கு 22 பிர­தி­ய­மைச்சுப் பத­வி­களும் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு 28 அமைச்சுப் பத­வி­களும் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அதா­வது சுதந்­திரக் கட்­சிக்கு 15 பிர­தி­ய­மைச்சுப் பத­வி­களும் 7 இரா­ஜாங்க அமைச்சுப் பத­வி­களும் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

எவ்­வா­றெ­னினும் அமைச்சு பத­வி­களை பெறு­வதில் இன்னும் ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் சுதந்­திரக் கட்­சிக்கும் இடையில் தொடர்ந்து முரண்­பா­டுகள் இடம்­பெ­று­வ­தா­கவே தெரி­கின்­றது.

எனினும் சுதந்­திரக் கட்சி கோரு­கின்ற அமைச்சுப் பத­விகள் கிடைக்­கா­விடின் சுதந்­திரக் கட்­சியின் அனைத்து உறுப்­பி­னர்­களும் எதிர்க்­கட்­சியில் அமர்ந்­து­வி­டலாம் என்று ஜனா­தி­பதி கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளிடம் தெரி­வித்­த­தா­கவும் தக­வல்கள் தெரி­வித்­தன.

குறிப்­பாக நிதி­ய­மைச்சு விட­யத்­திலே முரண்­பா­டுகள் தோன்­றி­யுள்­ளன. எனினும் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு நிதிய­மைச்சை விட்­டுக்­கொ­டுக்­கு­மாறு கட்­சியின் சில சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் ஜனா­தி­ப­தி­யிடம் தெரிவித்ததாகவும் ஜனா­தி­பதி அதற்கு இணங்­கி­ய­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.

இது இவ்­வாறு இருக்க அமைச்­ச­ரவை அமைச்­சர்கள் மற்றும் இரா­ஜாங்க பிரதி அமைச்­சர்­களின் எண்­ணிக்கை தொடர்பில் இது­வரை இறுதி முடிவு எடுக்­கப்­ப­ட­வி்­லலை என்றும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

ஒரு வேளை மொத்த அமைச்­சுக்­களின் எண்­ணிக்கை 100 அல்­லது 90 ஆக அமை­யலாம் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அர­சி­ய­ல­மைப்பின் 19ஆம் திருத்தச் சட்­டத்தின் அடிப்­ப­டையில் அமைச்­சர்­களின் எண்­ணிக்கை 30 ஆக வரையறுக்­கப்­படும்.எனினும், தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்டால் எண்­ணிக்­கையை உயர்த்த முடியும்.

அந்­த­வ­கையில் தற்­போது தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­ப­ட­வுள்­ளதால் அமைச்சுப் பத­விகள் அதிகரிக்கப்படவுள்­ளன.

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்­கான புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை கடந்த வௌ்ளிக்­கி­ழமை கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பொதுச் செய­லாளர் கபீர் ஹசீம், மற்றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பதில் பொதுச்­செ­ய­லாளர் துமிந்த திஸா­நா­யக்க ஆகியோர் இந்த புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்­டனர்.

எதிர்­வரும் இரண்டு வரு­டங்­க­ளுக்­காக தேசிய அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்கு ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணங்­கி­யுள்­ளன.

ஐக்கிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கடந்த வௌ்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டது.

ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீம், மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

எதிர்வரும் இரண்டு வருடங்களுக்காக தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இணங்கியுள்ளன. அதன்படியே தற்போது அமைச்சுப்பதவிகளும் பகிரப்படவுள்ளன.

Share.
Leave A Reply