தனது கள்ளக்காதலியுடன் அநுராதபுரம், நவநகரத்திலுள்ள விடுதி ஒன்றுக்கு வந்த சிறைக் காவலர் ஒருவர், திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக மரணமடைந்தமை தொடர்பில் அநுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தின் பல்வேறு குற்றங்களுக்கான பிரிவு, இன்று (25) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த சிறைக் காவலருக்கு 55 வயது எனவும் அவருக்கு திருமண வயதில் இரு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரணமடைந்த சிறைக் காவலர் 30 வருடத்திற்கும் அதிகமான சேவைக்காலத்தை பூர்த்தி செய்துள்ளதோடு நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடமையாற்றியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர், 35 வயதான இராஜாங்கணை பிரதேசத்தைச் சேர்ந்த விவாகரத்தான குறித்த பெண்ணுடன் மிக நீண்ட காலமாக கள்ளத் தொடர்பில் இருந்து வந்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

நேற்று (24) பிற்பகல் 5.30 மணியளவில் இராஜாங்கணை பிரதேசத்திலிருந்து குறித்த சிறைக் காவலாளியை சந்திக்கும் நோக்கில் புறப்பட்டு வந்த குறித்த பெண், குறித்த நபருடன் அநுராதபுரம், நவநகர பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றிற்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரும் குறித்த விடுதியில் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த நபருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து உடனடியாக அப்பெண் அவரை அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

குறித்த நபர்  வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் வைத்தே மரணமடைந்துள்ளார்.

குறித்த நபர், அப்பெண்ணுடன் உறவில் ஈடுபடுவதற்கு முன்னர் பாலியல் சம்பந்தமான மருந்தொன்றை உட்கொண்டதனால் குறித்த மரணம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபருக்கு நீண்ட காலமாக இருந்து வந்த இரத்த அழுத்தம் மற்றும் இதய அழுத்தம் என்பன இதற்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply