ஆசிய (மிஸ் ஏசியா) அழகுராணியாக இந்தியாவின் கனிகா கபூர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மிஸ் ஏசியா 2015 அழகுராணி போட்டிகளின் இறுதிச்சுற்று இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள கொச்சி நகரில் கடந்த வாரம் நடைபெற்றது.
இந்தியா, இலங்கை, அஸர்பைஜான், பஹ்ரெய்ன், பூட்டான், சீனா, ஈரான், மலேஷியா, நேபாளம், பிலிப்பைன்ஸ், திபெத், துர்க்மேனிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உஸ்பெகிஸ்தான் ஆகிய 14 நாடுகளைச் சேர்ந்த அழகுராணிகள் இப்போட்டிகளில் பங்குபற்றினர்.
இலங்கையின் சார்பில் மிஸ் ஏசியா ஸ்ரீலங்கா அழகுராணியான பிரிஸ்கா நிர்மலி பங்குபற்றினார்.
இப்போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்குபற்றிய புதுடில்லியைச் சேர்ந்த 20 வயதான கனிக்கா கபூர் மிஸ் ஏசியா 2015 அழகுராணியாக முடிசூட்டப்பட்டார்.
அவருக்கு 5 லட்சம் இந்திய ரூபா (சுமார் 9.75 இலங்கை ரூபா பரிசு வழங்கப்பட்டது.
பிலிப்பைன்ஸை சேர்ந்த அல்ப் மேரி நெதனில் டக்ளே உய் (25) இரண்டாமிடத்தைப் பெற்றார்.
அவருக்கு 2 லட்சம் இந்திய ரூபாவும் மூன்றாமிடத்தைப் பெற்ற அஸர்பைஜானைச் சேர்ந்த ஜேய்லா குலியேவாவுக்கு (23) ஒரு லட்சம் இந்திய ரூபாவும் பரிசாகவழங்கப்பட்டன.