இந்தியாவில் உள்ள மக்களின் மதரீதியிலான கணக்கெடுப்பு விவரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

இந்திய மக்கள் தொகையில் சுமார் 80 சதவீதம் பேர் இந்துக்கள். 14 சதவீதம் பேர் முஸ்லிம்கள்.

இந்திய மக்கள் தொகை ஆணையம் வெளியிட்டுள்ள இந்த தகவலின்படி, இந்தியாவில் அதிகபட்சமாக இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 24.6 சதவீதமும் இந்துக்களின் மக்கள்தொகை 16.8 சதவீதமும் வளர்ச்சிகண்டுள்ளது.

இந்தப் புள்ளிவிவரங்களின் படி இந்திய மக்கள் தொகையில் 79.8 சதவீதம் பேர் இந்துக்கள். 14.2 சதவீதம் பேர் முஸ்லிம்களாவர்.

இருந்தபோதும் இந்துக்களின் மக்கள்தொகை முந்தைய காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 0.7 சகவிகிதம் குறைந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.

2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்து மக்களுக்கு அடுத்தபடியாக, சீக்கியர்களின் எண்ணிக்கை விகிதம் 0.2 என்ற அளவிலும் பௌத்தர்களின் எண்ணிக்கை 0.1 என்கிற அளவிலும் சரிந்துள்ளது என இந்த அறிக்கை கூறுகிறது.

கிறிஸ்தவர்கள் மற்றும் ஜைன மக்களின் மக்கள் தொகையில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை.

இந்தியாவில் உள்ள 121.09 கோடி மக்கள் தொகையில், 96.63 கோடிப் பேர் இந்துக்களாவர். 17.22 கோடிப் பேர் இஸ்லாமியர்கள். கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.78 கோடியாகும்.

இந்தியாவில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், பௌத்தம், ஜைனம் என ஆறு மதங்களையே மக்கள் பெருமளவில் பின்பற்றுவதாக இந்தக் கணக்கீடுகள் கூறுகின்றன.

இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தேசிய அளவில் துவங்கி, சிறிய நகரங்கள் வரையிலான மதரீதியிலான மக்கள் தொகை விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply