சென்னை: மகாத்மா காந்தி சிலையை இரண்டு இந்தியர்கள் சேர்ந்து அநாகரீகமான முறையில் அவமதித்த செயல் தொடர்பான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேசத் தந்தை என்று போற்றப்படும் காந்தியின் சிலையை இவ்வளவு கேவலமாக நடத்திய அந்த நபர்கள் மிகவும் மோசமாக நடந்துள்ளனர்.

26-1440571632-two-indians-defame-gandhi-statue4-600

அந்த காந்தி சிலை இந்தியாவில் உள்ள சிலைதான். ஏதோ ஒரு பொது இடத்தில் அது உள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்திருந்த அந்த இடத்திற்கு வந்த ஒரு சீக்கியரும், இன்னொரு சீக்கியர் அல்லாதவரும் சேர்ந்து காந்தி சிலையை அவமதிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர்.

madadmakanthiஒருவர் கையில் செருப்பைத் தூக்கி காந்தி காதில் வைத்துள்ளார். இன்னொருவர் காந்தியின் காதைப் பிடித்துத் திருகுகிறார்.
பின்னர் கன்னத்தில் அறைகிறார். அப்போது வீடியோ எடுத்த நபர் செருப்பை தலையில் வைக்குமாறு கூற அவரும் செருப்பை தூக்கி காந்தி தலையில் வைக்கிறார்.
அப்பகுதி வழியாக சென்றோர் இதைப்பார்த்து விட்டு அமைதியாக செல்கின்றனர். வாட்ஸ் ஆப் மூலம் இந்த வீடியோ பரவி வருகிறது. யார் இந்த அக்கிரமக்காரர்கள், எந்த ஊரில் நடந்தது என்று தெரியவில்லை.

Share.
Leave A Reply