லக்னோ: உத்தர பிரதேசத்தில் பெண் ஒருவர் முடக்குவாதத்தால் படுத்த படுக்கையாக இருக்கும் வயதான மாமியாரை அடித்து, படுக்கையில் இருந்து இழுத்து கீழே தள்ளுவது பற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோஷாம்பியைச் சேர்ந்த பெண் ஒருவர் முடக்குவாதத்தால் படுத்த படுக்கையாக இருக்கும் வயதான மாமியாரை பல காலமாக அடித்து நொறுக்கி வந்துள்ளார்.
எதையும் வாய்விட்டு பேச முடியாத நிலையில் இருக்கும் அந்த மூதாட்டி அடி, உதையை வாங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.
இந்நிலையில் மூதாட்டியின் கணவர் மற்றும் மகனுக்கு அவர் தாக்கப்படுகிறாரோ என்ற சந்தேகம் எழுந்தது. சந்தேகத்தை தீர்க்க அவர்கள் மருமகளுக்கு தெரியாமல் மாமியார் இருக்கும் அறையில் சிசிடிவி கேமராவை பொருத்தினர்.
கேமரா விஷயம் தெரியாத மருமகள் அந்த அறைக்கு வந்து வழக்கம் போல மாமியாரை தாக்கினார். படுத்தபடுக்கையாக கிடக்கும் அந்த மாமியாரின் முகத்தில் ஓங்கி, ஓங்கி அடித்தார்.
மேலும் அவரை கட்டிலில் இருந்து இழுத்து கீழே தள்ளினார். ADVERTISEMENT கீழே விழுந்த மூதாட்டி செய்வது அறியாது கையை தலைக்கு வைத்து அமைதியாக படுத்தார்.

இந்த வீடியோ தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 

Share.
Leave A Reply