சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘புலி’. படத்திற்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத். இப்படத்தின் மிகப்பெரிய சிறப்பு ஸ்ரீதேவி இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு மீண்டும் நேரடித் தமிழ் படத்தில் நடிப்பதே.
மேலும் ஸ்ரீதேவியை மிகைப்படுத்தும் விதமாக டிரெய்லரில் கூட ஸ்ரீதேவியே அதிகம் தென்படுகிறார்.
இந்நிலையில் புலி படத்தின் மீது கொண்டுள்ள ஈடுபாடு மற்றும் விளம்பரம் காரணமாக ஸ்ரீதேவி தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்ரீதேவி போனி கபூர் என வைத்திருந்த பெயரை ஸ்ரீதேவி புலி கபூர் என மாற்றியுள்ளார்.
மேலும் புலி குறித்து எந்த செய்தி வந்தாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் தவறாது பகிர்ந்துவிடுகிறார்.
ஏன் புலி படத்தில் இவ்வளவு ஈடுபாடு என விசாரித்ததில்,படத்தில் ஸ்ரீதேவி நடிக்க ஏகப்பட்ட கண்டீஷன்கள் போட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
நிறைய சம்பளம் முதலில் இந்த சம்பளம் கேட்டு பின்வாங்கிய படம் தான் பாகுபலி’. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த பாத்திரத்திற்குத் தான் முதலில் ஸ்ரீதேவியிடம் பேசப்பட்டது.
அடுத்ததாக பாகுபலி படக்குழுவிடம் சொன்ன அதே சம்பளத்திற்கு ‘புலி’ பட டீம் ஒப்புக்கொண்டது. மேலும் விஜய்க்கு அடுத்து நிகராக ஸ்ரீதேவிக்கு படத்தில் காட்சிகளும் கேரக்டரும் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எல்லாவற்றிற்கும் மேல் தான் அழைத்து வரும் மேக்கப் கலைஞர்களைத் தான் எனக்கு நான் பயன்படுத்திக் கொள்வேன் என ஸ்ரீதேவி சொல்லிய அனைத்து கண்டீஷன்களுக்கும் ‘புலி’ பட டீம் ஓகே சொல்லியுள்ளனர் எனக் கூறப்படுகிறது.
மேலும் ஸ்ரீதேவியை கொஞ்சம் கூட மனம் கசக்காமல் பார்த்துக் கொண்டுள்ளனர் படக்குழு.