குஜ­ராத்தில் படேல் சமூ­கத்­தினர் நடத்­திய போராட்­டத்தை தொடர்ந்து நடை­பெற்ற வன்­முறை சம்­ப­வங்கள் கார­ண­மாக குஜ­ராத்தின் இயல்பு வாழ்க்கை முற்­றிலும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு 4 நக­ரங்­களில் ஊர­டங்கு அமுல்படுத்தப்­பட்­டு மாநி­லத்தில் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­து. மேலும் 5000 துணை இரா­ணு­வத்­தினர் குவிக்­கப்­பட்­டுள்­ளனர்.

295399_60904092இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

குஜ­ராத்தில் படேல் சமூ­கத்தை இதர பிற்­ப­டுத்­தப்­பட்டோர் பிரிவில் ஓ.பி.சி. சேர்க்­கக்­கோரி நடை­பெற்ற போராட்டத்தை முன்­னின்று நடத்­திய ஹர்திக் படேல் கைது செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து மாநி­லத்தின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் வன்­முறை சம்பவங்கள் வெடித்­தன.

நேற்று முன்­தினம் போராட்­டக்­கா­ரர்­களால் 50-க்கும் மேற்­பட்ட அரசுப் பேருந்­துகள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டன. அரசு அலு­வ­ல­கங்கள் சேதப்­ப­டுத்­தப்­பட்­டன.

வன்­மு­றையைத் தொடர்ந்து, முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக அக­ம­தாபாத், சூரத், மேஷனா, விஸ்­நகர், உஞ்சா ஆகிய பகு­தி­களில் நேற்று ஊர­டங்கு சட்டம் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், துணை இரா­ணுவப் படையைச் சேர்ந்த 5000 பேர் பாது­காப்­புக்­காக குவிக்­கப்­பட்­டுள்­ளனர்.

வன்­முறைச் சம்­ப­வங்­களை அடுத்து குஜராத் முதல்வர் ஆனந்­திபென் படேல் மத்­திய உள்­துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்­குடன் ஆலோ­சனை மேற்­கொண்டுள்ளார்.

இதன்போது மாநி­லத்தின் சட்டம் ஒழுங்கு நிலைவரம் குறித்து முதல்வர் ஆலோ­சித்­த­தாக தெரி­விக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலை­மையை சமா­ளிக்க கூடுதல் படை­களை மத்­திய அரசு அனுப்பும் என ராஜ்நாத் சிங் உறுதியளித்ததாகவும்.

உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்கள் மீது பொலிஸார் தடி­யடி நடத்­தி­ய­தாக கூறப்­ப­டு­வது குறித்தும் விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட்­டுள்­ள­தாகவும் முதல்வர் ஆனந்­திபென் தெரி­வித்தார்.

இந்­நி­லையில், நேற்று கடை­ய­டைப்பு போராட்டம் நடை­பெற்­றமை காரணமாக அரசுப் பேரூந்துகள் இயங்கவில்லை. பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.

சந்தைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் குஜராத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டன.

2BAFDE7F00000578-3211896-image-a-110_14406285308238d2cf55d9b9e467a90f5829e397bf0ed_18

186ac50b8ca84af9a4ac15d8fbfbe490_18gujarat1

Share.
Leave A Reply