ரியோடி ஜெனீரோ: பிரேசிலில் சாலையோரம் நின்று சண்டை போட்ட இளைஞரை அமைதிப்படுத்த முயன்று தோற்றுப் போன ஒரு பெண், அதிரடியாக அவரை கீழே வீழ்த்தி தனது தொடையால் வளைத்துப் பிடித்து அமுக்கு இரு தொடைகளுக்கும் நடுவே சிறிது நேரம் முடக்கிப் போட்டு அவரை அடக்கியது பரபரப்பையும் கலகலப்பையும் ஏற்படுத்தியது.

இத்தனைக்கும் அந்தப் பெண்ணை விட பல மடங்கு பயில்வானாக காட்சி தருகிறார் அந்த நபர். ஆனால் அடங்காத அவரை தனது தொடைகளுக்குள் போட்டு அமுக்கி திணறடித்த அந்தப் பெண்ணின் தைரியம் பலரையும் கவர்ந்து விட்டது.

தொடைகளுக்குள் சிக்கித் தவித்த அந்த நபரால் வெளியே வர முடியவில்லை. திணறிப் போய் விட்டார். இன்னொருவர் வந்து அவரை மீட்டு வெளியே கொண்டு வந்தார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.

லா மியூசிக் என்ற இரவு கிளப்புக்கு வெளியேதான் இந்த அக்கப் போர். அந்த நபர் கிளப்புக்கு முன்பாக நின்று கொண்டு ஒருவருடன் வாய்ச்சண்டையில் ஈடுபட்டிருந்தார்.

சட்டையைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு சண்டை போட்டார் அவர். அவரை அமைதிப்படுத்த முயல்கிறார் ஒரு இளம் பெண்.

ஆனால் அந்த வாலிபர் கேட்பதாக இல்லை. அவரை மீறி மீறி போய் சண்டை போடுகிறார். இதையடுத்து வேறு வழியில்லாமல் அந்த வாலிபரைப் பிடித்து சட்டென்று கீழே தள்ளி தனது தொடைகளால் வளைத்துப் பிடித்து அமுக்க நகர விடாமல் செய்கிறார் அப்பெண்.

இதை எதிர்பார்க்காத அந்த நபர் அப்பெண்ணின் தொடைகளைத் தட்டி விடுவிக்குமாறு கேட்கிறார். ஆனால் அப்பெண்ணோ விடுவதாக இல்லை. அப்படியே தொடைகளுக்குள் போட்டு முடக்கியபடி இருக்கிறார்.

கிட்டத்தட்ட 40 விநாடிகள் அந்த நபரை விடுவிக்காமல் திணறடித்து விட்டார். மற்றவர்கள் வந்து கஷ்டப்பட்டு பிரித்த பிறகே அந்த நபர் விடுதலையானார்.. செம காமெடியாக உள்ளது இந்த வீடியோ. தற்போது வைரல் ஆக உலா வந்து கொண்டுள்ளது.

Share.
Leave A Reply